3 வார சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 215 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் குறியீடு..!
மும்பை: மார்ச் மாத காலாண்டில் நிறுவனங்களின் முடிவுகள் மோசமாக இருக்கும் என்ற கணிப்புகள் மூலம் இன்று மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர்.
இதனால் பங்குச்சந்தை வர்த்தகம் தொடர் சரிவைச் சந்தித்து 215 புள்ளிகளை இழந்துள்ளது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 251.21 புள்ளிகள் சரிந்து 24,685.42 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 67.90 புள்ளிகள் சரிந்து 7,546.45 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், மாருதி, எச்டிஎப்சி, எல் அண்ட் டி, ஐடிசி, இன்போசிஸ் போன்ற முக்கியமான நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications