மும்பை: வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு மந்தமாகச் செயல்பட்டு வந்த நிலையில் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் முதலீட்டாளர்கள் ப்ளூ சிப் பங்குகள் மீது அதிகளவிலான முதலீடு செய்தனர், இதனால் சென்செக்ஸ் குறியீடு 348 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் காலாண்டு முடிவுகளை எதிர்பார்த்து அதிக டிவிடென்ட் தொகையை அளிக்கும் நிறுவனத்தில் முதலீட்டுக் குவிந்தது. உதாரணமாக வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் மதியம் 1.30 மணி வரை சரிவில் தத்தளித்த சென்செக்ஸ் குறியீடு 1.14 சதவீதம் வரையில் உயர்ந்து 25,022.16 புள்ளிகளை எட்டியது. இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 348.32 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு மதிய நேர வர்த்தகத்தில் 116.20 புள்ளிகள் வரை உயர்ந்து 7,671.40 புள்ளிகளை எட்டியது.
இன்றைய வர்த்தகத்தில் டாப் 30 நிறுவனங்களின் நிலையை அறிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications