மும்பை: செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் 123 புள்ளிகள் உயர்வில் லாபத்தில் முடிந்தாலும், ஆசிய, ஐரோப்பிய சந்தைகள் நிலவரம் மற்றும் உள்நாட்டுச் சந்தை முதலீட்டாளர்கள் மூலம் அதிகளவிலான ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தக உயர்விற்கு ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை மற்றும் பார்மா துறை நிறுவனங்களில் செய்யப்பட்ட அதிகளவிலான முதலீடே முக்கியக் காரணமாகும்.

அதுமட்டும் அல்லாமல் பருவமழை உற்பத்தி அளவுகள் 105 சதவீதமாக இருக்கும் என்ற மத்திய அரசின் அறிவிப்புகள் இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டு அளவைக் கணிசமாக உயர்த்தியது.
இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 123.43 புள்ளிகள் வரை உயர்ந்து 25,145.59 புள்ளிகளை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 37.55 புள்ளிகள் வரை உயர்ந்து 7,708.95 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications