மும்பை: அடுத்த 3 மாதத்தில் இந்தியாவில் பருவமழை இயல்பான நிலையை எட்டும் என மத்திய அரசு கணித்துள்ளது. இதனால் நாட்டின் விவசாயப் பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பது மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.
கடந்த இரு பருவமழை காலங்களும் மிகவும் மோசமான நிலையை எட்டியதால் நாட்டின் விவசாய உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மொத்த ஜிடிபி-யில்14 சதவீதம் விவசாயத்தை நம்பியுள்ளது. இந்திய விவசாயத் துறையின் மொத்த மதிப்பு 2 டிரில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்தச் செய்திகள் சந்தை முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
புதன்கிழமை வர்த்தகம் துவங்கிய முதல் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீட்டு செய்யப்பட்டு வர்த்தகத் துவக்கத்திலேயே 350 புள்ளிகள் வரை உயர்ந்தது. இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் வரை உயர்ந்து அசத்தியது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 481.16 புள்ளிகள் உயர்ந்து 25,626.75 புள்ளிகளை எட்டியது. இன்று ஒரு நாளில் மட்டும் சென்செக்ஸ் குறியீடு 1.91 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலேவே நிஃப்டி குறியீடு இன்று 141.50 புள்ளிகள் உயர்ந்து 7,850.45 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications