பருவமழை கணிப்புகளின் எதிரொலி.. 190 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!
மும்பை: இன்போசிஸ் நிறுவனத்தின் 4வது காலாண்டு முடிவு, பருவ மழை கணிப்புகள் ஆகியவை இந்திய சந்தைக்குச் சாதகமாக அமைந்துள்ளது நிலையில், நான்கு நாள் விடுமுறைக்குப் பின் துவங்கிய மும்பை பங்குச்சந்தை இன்று 190 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் பணவீக்கத்தின் எதிரொலியாகவும், பருவமழை கணிப்புகளின் எதிரொலியாகவும் சந்தையில் முதலீட்டு அளவு அதிகரித்தது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கணிசமான முதலீட்டுடன் 189.61 புள்ளிகள் உயர்வில் 25,816.36 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 64.25 புள்ளிகள் உயர்வுடன் 7,914.70 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications