ஓரேநாளில் 500 புள்ளிகள் இழந்த சென்செக்ஸ்..!
மும்பை: ஏப்ரல் மாத ஆர்டர்கள் வியாழக்கிழமை முடிவடைவதால் மும்பை பங்குச்சந்தையில் இன்று அதிகளவிலான ப்ளூ சிப் பங்கள் விற்பனை செய்யப்பட்டது, இதனால் சென்செக்ஸ் குறியீடு மதிய வர்த்தகத்தில் மளமளவெனச் சரிய துவங்கி சுமார் 500 புள்ளிகள் வரை இழந்தது.
இதுமட்டும் அல்லாமல் இன்றைய சரிவிற்கு முக்கியக் காரணம், பாங்க் ஆஃப் ஜப்பான் (ஜப்பான் நாட்டின் மத்திய வங்கி) இன் நாணய கொள்கை. இதன் அறிவிப்பால், சர்வதேச பங்கு வர்த்தகமும் கடுமையான பாதிப்பு அடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் வரை சரிந்த நிலையில், வர்த்தக முடிவில் 461.02 புள்ளிகளை இழந்து 25,603.10 புள்ளியை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடும் காலை வர்த்தகம் முதல் தொடர் சரிவைச் சந்தித்து 132.65 புள்ளிகள் குறைந்து 7,847.25 புள்ளிகளை அடைந்தது.


Click it and Unblock the Notifications