மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக் கடன் நிறுவனமான எச்டிஎப்சி நிறுவனம் மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் 40 சதவீத உயர்வில் 2,607 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 1,862 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் நிதியாண்டில் எச்டிஎப்சி நிறுவனத்தின் மொத்த லாப அளவு 18 சதவீதம் உயர்ந்து 5,990 கோடி ரூபாயில் (2015ஆம் நிதியாண்டின் லாப அளவு) இருந்து 7,093 கோடி ரூபாயாக உயர்ந்து சந்தை முதலீட்டாளர்களை அசத்தியுள்ளது.

இந்நிலையில் திங்கட்கிழமை காலாண்டு முடிவுகளை வெளியிட்ட எச்டிஎப்சி நிறுவனம், தனது நிறுவன முதலீட்டாளர்களுக்கு இடைக்கால ஈவுத்தொகையுடன் சேர்த்து 14 ரூபாய் என்ற இறுதி ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான எச்டிஎப்சி ஸ்டாண்டெட் லைப் இன்சூரன்ஸ், எச்டிஎப்சி ஏர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் எனத் தனது 21 கிளை நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாபத்தைச் சேர்த்தால் நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாப அளவு 16 சதவீத உயர்வில் 10,190 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 0.43 சதவீதம் உயர்ந்து 1,093.10 ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications