மும்பை: ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையின் லாபகரமான சூழ்நிலையின் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் இன்று முதலீட்டு அளவு கணிசமாக உயர்வடைந்தது.
இதன் எதிரொலியாக உள்நாட்டுச் சந்தையில் ப்ளூ சிப் பங்களுகள் மீதான முதலீட்டு அளவுகள் அதிகரித்து, மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 160 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்த சென்செக்ஸ் குறியீடு இன்று சர்வதேச சந்தைகளின் தாக்கத்தின் காரணமாக வர்த்தகத் துவங்கத்தில் இருந்தே லாபகரமான நிலையில் இருந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 160.48 புள்ளிகள் உயர்வுடன் 25,262.21 புள்ளிகளை எட்டியுள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 28.95 புள்ளிகள் உயர்ந்து 7,735.50 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், போன்ற முக்கிய நிறுவனங்கள் 0.25%க்கும் அதிகமான அளவில் சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications