கொல்கத்தா: இந்த வருடத் தீபாவளிக்கு எந்தப் படம் வருகிறதோ இல்லையோ, கல்யான் ஜூவல்லர்ஸ் நிறுவனம் ஆன்லைன் விற்பனை இணையதளத்தை ரீலிஸ் உறுதி.
2015ஆம் நிதியாண்டில் 30 சதவீத அதிக வருவாய் எட்டிய கல்யான் ஜூவல்லர்ஸ், நடப்பு நிதியாண்டில் சர்வதேச சந்தையில் 3 புதிய கிளைகளையும், ஆன்லைன் விற்பனை இணையதளத்தையும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது.
கடந்த வருடம் 10,000 கோடி ரூபாய் வருவாய் எட்டிய நிலையில் 2016ஆம் நிதியாண்டில் 13,000 கோடி ரூபாய் என்ற வர்த்தக இலக்கை எட்டிய கல்யான் ஜூவல்லர்ஸ் நிர்வாகம் முயற்சி செய்யத் திட்டமிட்டுள்ளது என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் கல்யான்ராமன் தெரிவித்தார். தற்போது கல்யான் ஜூவல்லர்ஸ் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து 1000க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து வந்தாலும், தீபாவளிக்கு முன் அல்லது தீபாவளி அன்று முழுமையான வர்த்தகம் செய்யத் தகுந்த இணையதளத்தைக் கல்யான் ஜூவல்லர்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என ரமேஷ் கல்யான்ராமன் கூறினார். மேலும் நடப்பு நிதியாண்டில் 100 கிளைகளாக இருக்கும் கல்யான் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில் புதிதாக 22 கிளைகள் இணைய உள்ளது. இதில் முக்கியமாக மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளில் புதிய கிளைகளைத் திறக்க உள்ளோம். இதன் மூலம் புதிய சந்தை வாடிக்கையாளர்களைப் பெறுவோம் என ரமேஷ் தெரிவித்தார். அதேபோல் இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக மைகல்யான் கிளைகளை அதிகரிக்கவும், இப்பிரிவில் கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும் முடிவு செய்துள்ளோம். அதுமட்டும் அல்லாமல் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்குத் தேவையான நிதி தொகை அனைத்தும் வர்த்தகத்தின் மூலம் கிடைப்பதால், பங்குச்சந்தையின் மூலம் நிதிதிரட்டம் திட்டம் கல்யான் ஜூவல்லர்ஸ் நிர்வாகத்திற்கு இல்லை என்று ரமேஷ் கூறினார்.
ரூ.13,000 கோடி வர்த்தகம்
பிளிப்கார்ட்
புதிய கிளைகள்
மலேசியா, இலங்கை, சிங்கப்பூர்
மைகல்யான்
ஐபிஓ இல்லை..
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications