மும்பை: வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை 300 புள்ளிகள் வரை சரிவை சந்தித்துள்ளது. நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பிற்கான சாத்தியங்கள் குறைவு ஆகியவை இன்று சந்தை வர்த்தகத்தை அதிகளவில் பாதித்தது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 300.65 புள்ளிகளைக் குறைந்து 25,489.57 புள்ளிகளை எட்டியுள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 85.50 புள்ளிகள் சரிந்து 7,814.90 புள்ளிகளை அடைந்தது வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஏசியன் பெயின்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஐடிசி ஆகிய நிறுவனங்களைத் தவிரப் பிற அனைத்து நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளது.
மேலும் அதானி போர்ட்ஸ் இன்றைய வர்த்தகத்தில் 3.48 புள்ளிகள் சரிந்து மிகப்பெரிய அளவில் பாதித்தது.


Click it and Unblock the Notifications