மும்பை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் என்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் ஆசிய சந்தையின் மந்தமான வர்த்தகச் சூழலில், மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டது.

இதனால் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் சரிவை சந்தித்த மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் கணிசமான உயர்வைச் சந்தித்துச் சரிவில் இருந்து இந்திய சந்தையை மீண்டது.
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 163.66 புள்ளிகள் உயர்ந்து 25,653.23 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

இதேபோல் நிஃப்டி குறியீடு 45.85 புள்ளிகள் உயர்வில் 7,860.75 புள்ளிகளை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ வங்கி சுமார் 4.22 சதவீதம் என்ற மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதேபோல் வெனிசூலா நாட்டின் பொருளாதாரம் சரிவால் மிகப்பெரிய வர்த்தகச் சரிவை சந்தித்த டாக்டர் ரெட்டி நிறுவனம் இன்று 3.16 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications