மும்பை: அமெரிக்கச் சந்தையில் வேலைவாய்ப்புகள் குறைந்ததை அடுத்து நாணயக் கொள்கையின் ஆலோசனை கூட்டத்தில் வட்டி உயர்விற்கான வாய்ப்புகள் குறைந்தது. இதனால் சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் மீது முதலீட்டுச் செய்யத் துவங்கியுள்ளனர்.
கச்சா எண்ணெய்யின் மீது செய்யப்பட்ட தொடர் முதலீடுகளால் கடந்த 3 வாரத்தில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பும் அதிகரித்துக் காணப்படுகிறது.

இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,053 என்ற அளவில் உயர்ந்து 10 கிராம் தங்கத்தின் விலை 30,530 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் ஆபரணத் தங்கத்தின் விலை 2 நாள் வர்த்தகத்தில் 16 ரூபாய் அதிகரித்து இன்று 2,855 ரூபாய் என்ற நிலையை அடைந்துள்ளது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் 300 ரூபாய் அதிகரித்துச் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 1 கிலோ வெள்ளியின் விலை 41,545 ரூபாயாக உயர்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.77 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications