மும்பை: வங்கிச்சேவையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி இந்திய வங்கிகளின், வரலாற்றில் இதுவரை காணாத அளவில் 3 மாதத்தில் 5,370 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
இவ்வங்கியின் மிகப்பெரிய நஷ்டத்தின் மூலம் மும்பை பங்குச்சந்தையின் BANKEX குறியீடு 100 புள்ளிகள் அளவில் சரிவை சந்தித்துள்ளது.

2016ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டு முடிவுகளைப் புதன்கிழமை வெளியிட்ட பஞ்சாப் நேஷ்னல் வங்கி யாரும் எதிர்பார்க்காத வகையில் 5,370 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இதேக்காலக்கட்டத்தில் 307 கோடி லாபத்தைச் சந்தித்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 81 கோடி ரூபாய் லாபம் பெறும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால் இவ்வங்கியின் NPA அளவுகள் 12.9 சதவீதம் அதிகரித்து லாபத்தைப் பூஜ்ஜியம் ஆகி, நஷ்டத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் செயல்படா சொத்துகள் எனப்படும் NPA-வின் அளவு 4வது காலாண்டில் 12.9 சதவீதம் அதிகரித்து 34,338 கோடி ரூபாயாக இருந்த இதன் அளவு 55,818 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதேபோல் வராக் கடன் அளவு டிசம்பர் மாதத்தில் 3ஸ448 கோடி ரூபாயில் இருந்து தற்போது 10,490 கோடி ரூபாயாக உயர்ந்து இந்திய வங்கித்துறையைப் பதம் பார்த்துள்ளது.
இந்நிலையில் பாங்க் ஆஃப் பரோடா டிசம்பர் காலாண்டில் 3,342 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications