மும்பை: ஆசிய சந்தையின் மந்தமான வர்த்தகச் சூழ்நிலையால் வியாழக்கிழமை வர்த்தகம் 350 புள்ளிகள் வரை சரிந்து சந்தையைப் பதம் பார்த்தது.
ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தையின் குறைவான வர்த்தகத்தால் மும்பை பங்குச்சந்தையில், இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே அதிகளவில் பாதித்தது. இதனால் இந்திய சந்தையில் அதிகளவிலான ப்ளூ சிப் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் மூடிஸ் முதலீட்டுச் சேவை நிறுவனத்தின் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 2016ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதம் அளவில் மட்டும் வளர்ச்சி அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இந்திய சந்தையில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் குறைந்தது. இதன் எதிரொலியாக ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் 200 புள்ளிகள் சரிவில் வர்த்தகம் செய்யப்பட்ட சென்செக்ஸ் 350 புள்ளிகள் அளவிலான சரிவிற்குத் தள்ளப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 304.89 புள்ளிகள் சரிந்து 25,399.72 புள்ளிகளை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 86.75 புள்ளிகள் குறைந்து 7,783.40 புள்ளிகளை அடைந்த இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications