மும்பை: நாட்டின் முன்னணி சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஐடிசி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 10,060 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனையைச் செய்துள்ளது.
இக்காலாண்டில் செய்யப்பட்ட மொத்த வர்த்தகத்தில் ஐடிசி நிறுவனம் 2,495 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது.

மத்திய அரசு அறிவித்த வரி உயர்வு, விழிப்புணர்வு கட்டுப்பாடுகள் மூலம் இந்நிறுவனத்தின் முக்கிய வர்த்தகப் பொருளான சிகரெட் விற்பனை அதிகளவில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்களுக்கு, ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 8.50 ரூபாய் என்ற தொகையை அளித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் ஐடிசி நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குப் போன்ஸாக 2 பங்குகளுக்கு 1 போனஸ் பங்குகளை அளித்துள்ளது. இதன் மூலம் ஐடிசி நிறுவனத்தின் பங்குமதிப்பு இன்று 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications