மும்பை: வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை, ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் திடீர் சரிவைச் சந்தித்தது. இதனால் லாபத்தில் வர்த்தகம் செய்யப்பட்ட மும்பை பங்குச்சந்தை 110 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது.
வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் லாபகரமான நிலையில் வர்த்தகம் செய்யப்பட்ட மும்பை பங்குச்சந்தை மதிய 2.30 மணியளவில் மளமளவெனச் சரிந்தது.

இதனால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 110 புள்ளிகள் வரை சரிந்தது, வர்த்தக முடிவில் 97.82 புள்ளிகள் சரிந்து 25,301.90 புள்ளிகளை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் அதிகளவில் பாதிக்கப்பட்டது, குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி (2.44% சரிவு), பாங்க் ஆஃ பரோடா (1.28% சரிவு), பஞ்சாப் நேஷ்னல் வங்கி (1.15% சரிவு), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (1.01% சரிவு) ஆகியவை அதிகளவிலான சரிவை சந்தித்தது.
மேலும் சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடு 33.70 புள்ளிகள் சரிந்து 7,749.70 புள்ளிகளை அடைந்து வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications