டெல்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, லாபத்தில் 66 சதவீத சரிவை சந்தித்துப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
2016ஆம் ஆண்டின் 4வது காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, மார்ச் மாத முடிந்த காலாண்டில் வெறும் 1,263.81 கோடி ரூபாய் மட்டுமே நிகர லாபமாகக் கொண்டு 66 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
மொத்த லாபம்
2016ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாத காலகட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த லாபமாக 1,263.81 கோடி ரூபாய் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் இவ்வங்கி 3,742.02 கோடி ரூபாய் லாபமாகப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருமானம்
இந்நிலையில், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் மொத்த வருமானம் 53,526.97 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 48.646.61 கோடி ரூபாயாக இருந்தது.
வராக் கடன்
இதே காலக்கட்டத்தில் எஸ்பிஐ வங்கியின் வராக்கடன் அளவு 2.5 மடங்கு அதிகரித்து 12,139.17 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே இவ்வங்கியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளது.
பங்குச்சந்தை
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் எஸ்பிஐ வங்கியின் பங்குகள் சரிவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலீட்டாளர்கள் இவ்வங்கியின் மீது அதிகளவிலான நம்பிக்கையை வைத்து 1.09 சதவீத உயர்வடைந்தது 189.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
நியூஸ்லெட்டர்
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications