இந்திய பங்குச்சந்தையில் இதுதான் ரொம்பக் காஸ்ட்லி..!

சென்னை: கடந்த 5 வருடங்களில் இந்திய மக்கள் மத்தியில் பங்குச்சந்தை முதலீடு குறித்த ஆர்வம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக ஐடி, வங்கியியல், ஆட்டோமொபைல் துறை சார்ந்த ஊழியர்கள், பெரு நகரங்களில் இருக்கும் 25-30 வயதுடைய இளைஞர்கள் மத்தியில் மிக அதிகளவில் காணப்படுகிறது.

சந்தையில் பணத்தை முதலீடு செய்கிறார்களோ இல்லையோ பங்குச்சந்தை குறித்த தகவல்களை அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் விலைமதிப்பு மிக்க நிறுவனப் பங்குகளையே இப்போது பார்க்கப்போகிறோம்.

பஜாஜ் பைனான்ஸ்

பஜாஜ் பைனான்ஸ்

என்பிஎப்சி பிரிவில் மிகப்பெரிய அளவில் வர்த்தகத்தைக் கொண்டு இருக்கும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் 7,902.15 ரூபாயாக உள்ளது.

ஹனிவெல் ஆட்டோமேஷன்

ஹனிவெல் ஆட்டோமேஷன்

ஆட்டோமொபைல் முதல் ஏரோஸ்பேஸ் வரையில் பல துறைகளில் வர்த்தகம் செய்து வரும் ஹனிவெல் ஆட்டோமேஷன் நிறுவனம் அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் தொழில்நுட்ப, உற்பத்தி எனப் பல பிரிவுகளில் உள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஹனிவெல் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 9,000 ரூபாயாக உள்ளது.

 

3எம் இந்தியா

3எம் இந்தியா

இந்நிறுவனம் தொழில்நுட்பம், உற்பத்தி, எனப் பல துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் முழுவதும் உள்ளது.

இதனால் இந்நிறுவனத்தின் பங்குகளுக்கு முதலீட்டாளர்களுக்குத் தனி இடம் உண்டு. அந்தவகையில் 3எம் இந்தியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 12,460.55 ரூபாயாக உள்ளது.

 

 

ஸ்ரீ சிமென்ட்ஸ்

ஸ்ரீ சிமென்ட்ஸ்

சிமென்ட் உற்பித்தி மற்றும் வர்த்தகத்தில் இந்தியாவில் 5 மாவட்டங்களில் சிறந்த விளங்கும் ஸ்ரீ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 13,600 ரூபாயாக உள்ளது.

பேஜ் இண்டஸ்ட்ரீஸ்

பேஜ் இண்டஸ்ட்ரீஸ்

இந்தியாவின் முன்னணி டெக்ஸ்டைல் நிறுவனமான பேஜ் இண்டஸ்ட்ரீஸ் (JOCKEY INDIA) இந்தியா மட்டும் அல்லாமல் 130 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. இதனால் இந்நிறுவனப் பங்குகளுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.

இந்திய சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 14,144.30 ரூபாய்.

 

எய்சர் மோட்டார்ஸ்

எய்சர் மோட்டார்ஸ்

இந்திய ஆட்டோமோடிவ் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள எய்சர் மோட்டார்ஸ் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்பனை தொடர் உயர்வைக் கண்டு வருகிறது.

மேலும் இந்நிறுவனம் தான் ராயல் என்பீல்ட் வர்த்தகத்தைக் கொண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சில சரிவுகளைச் சந்தித்தாலும் இந்நிறுவனப் பங்குகள் 18,757.05 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

 

BOSCH நிறுவனம்

BOSCH நிறுவனம்

ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் மற்றும் இத்துறை சார்ந்த தொழில்நுட்ப உருவாக்குவிதில் சிறந்து விளங்கும் BOSCH நிறுவனத்தின் பங்குகளுக்கு இந்தியா சந்தையில் மிகப்பெரிய மதிப்பு உண்டு.

இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 22,180 ரூபாய். இந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளைப் பார்க்க இதைக் கிளிக் செய்யவும்.

எம்ஆர்எப்

எம்ஆர்எப்

நாட்டின் முன்னணி டையர் உற்பத்தி நிறுவனமான எம்ஆர்எப் நிறுவனத்தின் பங்குகள் இந்திய சந்தையில் இன்று 33,400 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+