மும்பை: ஏப்ரல் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி அறிக்கையின் மந்தமான கணிப்புகளின் எதிரொலியாக அன்னிய முதலீட்டாளர்கள் முதல் உள்நாட்டு முதலீட்டாளர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் முதலீட்டை அதிகளவில் குறைத்தனர்.
இதன் காரணமாகவே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று சரிவுடன் துவங்கியது.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் குறியீடு 10.30 மணிக்கு மேல் கணிசமாக உயர்ந்தாலும் 1 மணிக்கு மீண்டும் சரிவு நிலைக்குத் திரும்பி தொடர்ந்து மந்தமான வர்த்தகத்திலேயே இருந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 127.71 புள்ளிகள் சரிந்து, 27,000 புள்ளிகள் என்ற நிலையில் இருந்து இறங்கி 26,635.75 புள்ளிகளை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடும் இன்றும் 33.55 புள்ளிகள் சரிந்து 8,170.05 புள்ளிகளை அடைந்து இந்த வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.77 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications