மும்பை: வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட மோசமான தொழிற்துறை உற்பத்தி அளவுகள் மற்றும் மந்தமான ஆசிய சந்தை வர்த்தகம் ஆகியவை இன்று இந்திய சந்தை வர்த்தகத்தை அதிகளவில் பாதித்தது.
ஆசிய சந்தைய சரிவிற்கு அமெரிக்கப் பெடரல் வங்கியின் நாணய கொள்கைக்கான கூட்டம் வித்திட்டுள்ளது. நடப்பு வாரத்தில் அமெரிக்கப் பெடரல் வங்கி வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்த முடிவுகளை எடுக்க உள்ளதால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் தங்களது முதலீட்டை அதிகளவில் குறைத்துள்ளனர்.

மேலும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் நாடு வெளியேறுவதற்காக ஜூன் 23ஆம் தேதி எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் எதிர்நோக்கியும் சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையை விட்டு விலகி நிற்கின்றனர்.

இத்தகைய மோசமான சூழ்நிலையில் சிக்கிக்கொண்ட மும்பை பங்குச்சந்தை இன்று 238.98 புள்ளிகள் சரிந்து 26,396.77 புள்ளிகளை எட்டியது.
இதேபோல் நிஃப்டி குறியீடு 58.40 புள்ளிகள் குறைந்து 8,111.65 புள்ளிகளை அடைந்ததுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று அதிகளவில் குறைந்து 67.12 ரூபாய்க்குச் சரிந்தது.


Click it and Unblock the Notifications