330 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ் குறியீடு..!
அமெரிக்கப் பெடரல் வங்கியின் நாணய கொள்கையின் முடிவுகள் இந்திய சந்தைக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை சந்தையில் இன்று அதிகரிகத்துக் காணப்பட்டது. இதனால் இன்று காலை வர்த்தகம் துவங்கும் முதலே லாபகரமான நிலையில் இருந்தது.
இதனைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்துறையின் கொள்கை மாற்றங்கள் சந்தையை மேலும் குதுகலப்படுத்தியது, இதன் எதிரொலியாகச் சென்செக்ஸ் குறியீடு இன்று 340 புள்ளிகள் வரை உயர்ந்தது.

புதன்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு நிலையான மற்றும் தொடர் உயர்ந்த வர்த்தக நிலையைச் சந்தித்ததால், சென்செக்ஸ் குறியீடு 330.63 புள்ளிகள் உயர்ந்து 26,726.34 புள்ளிகளை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 97.75 புள்ளிகள் உயர்ந்து 8,206.60 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications