மும்பை: ஐரோப்பிய சந்தையில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்கெடுப்பு இன்று பிரிட்டன் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடத்து வருகிறது. ஐரோப்பிய கூட்டணி நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேறினால் ஐரோப்பிய சந்தைக்கு மிகப்பெரிய பாதிப்பு என்றாலும், சர்வதேச சந்தைக்கு இது மிகவும் சாதகமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐரோப்பா-பிரிட்டன் விவகாரத்தின் எதிரொலியாக இந்திய சந்தை மட்டும் அல்லமாமல் ஆசிய சந்தைகளும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 290 புள்ளிகளை வரை உயர்ந்தாலும், வர்த்தக முடிவில் 236.57 புள்ளிகள் உயர்ந்து 27,002.22 புள்ளிகளை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 66.75 புள்ளிகள் உயர்ந்து 8,270.45 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைய உள்ளது.
பிரிட்டன் நாட்டில் நடந்து வரும் வாக்கெடுப்பின் முடிவுகள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் வெளியிடப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications