1 மணிநேர வர்த்தகத்தில் 1,000 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்: ஐரோப்பிய யூனியன்- பிரிட்டன் பிளவின் எதிரொலி

மும்பை: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காகப் பிரிட்டன் மக்கள் மத்தியில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் மக்கள் அதிகளவிலான ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஐரோப்பிய கூட்டணி நாடுகளில் இருந்து உலகில் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றான பிரிட்டன் முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது.

மேலும் ஐரோப்பிய கூட்டணி நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது 90 சதவீதம் உறுதியான நிலையில் சர்வதேச பங்குச்சந்தைகள் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

1 மணிநேர வர்த்தகம்

1 மணிநேர வர்த்தகம்

மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கி 1 மணிநேரத்தில் சென்செக்ஸ் குறியீடு மளமளவென 1000 புள்ளிகள் வரை சரிந்த 26,000 புள்ளிகளை அடைந்து மிகப்பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

வியாழக்கிழமை மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 27,0012 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகம் முடிவடைந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் துவங்கி சில மணிநேரங்களில் 964 புள்ளிகள் சரிந்து 26,037.46 புள்ளிகளை எட்டியதுள்ளது. மேலும் இன்றைய வர்த்தகம் முழுவதும் சரிவு பாதையிலேயே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிஃப்டி

நிஃப்டி

அதேபோல் நிஃப்டி குறியீடு இன்று 300.95 புள்ளிகள் சரிந்து 7,969.50 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆசிய சந்தை

ஆசிய சந்தை

இன்று ஆசிய சந்தை வர்த்தகத்தில் சீனா (1.19% வீழ்ச்சி), ஹாங்காங்(4.67% வீழ்ச்சி), தைவான்(2.74% வீழ்ச்சி) நாடுகளுடன் ஜப்பான்(7.78% வீழ்ச்சி) மற்றும் ஆஸ்திரேலிய(3.26% வீழ்ச்சி) சந்தைகளும் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஐரோப்பிய சந்தை

ஐரோப்பிய சந்தை

வியாழக்கிழமை வர்த்தகத்தில் ஐரோப்பிய சந்தையில் பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், பிரிட்டன், ஐரோப்பா ஆகிய அனைத்து வர்த்தக சந்தைகளும் 3 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை சந்தித்தது. இதில் ஜெர்மனி மற்றும் சுவிஸ் சந்தைகள் மட்டும் குறைவு. இன்றைய வர்த்தகம் ஐரோப்பிய சந்தையில் இன்னும் துவங்கவில்லை.

நாணய மதிப்புகள்

நாணய மதிப்புகள்

இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் இந்திய ரூபாய்க்கு எதிரான பிரிட்டன் பவுண்ட் நாணயத்தின் மதிப்பு 91.38 ரூபாய்க்காக உள்ளது. அதேபோல் யூரோவின் மதிப்பு 74.63 ரூபாயாக உள்ளது.

சவால்கள்

சவால்கள்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+