மும்பை: ஐரோப்பிய கூட்டணி நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேற 52 சதவீதம் பேர் ஆதரவும் அளித்து வெளியேற்றும் உறுதியானதைத் தொடர்ந்து ஆசிய சந்தையில் மிகப்பெரிய வர்த்தகச் சரிவு ஏற்பட்டது.
இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் இன்று காலை வர்த்கத்தில் சென்செக்ஸ் குறியீடு 1,050 புள்ளிகள் வரையிலான வர்த்தக இழப்பைச் சந்தித்தது. ஆனால் ஐரோப்பிய வர்த்தகத் துவக்கத்தில் வர்த்தக இழப்புக் கணிசமாகக் குறைந்தது.
மதியம் 1 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் கணிசமான உயர்ந்தது, இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 604.51 புள்ளிகள் அல்லது 2.24% வர்த்தக இழப்பைச் சந்தித்து 26,397.71 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடும் 181.85 புள்ளிகள் சரிந்து 8,088.60 புள்ளிகளை அடைந்து வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை முதலீட்டு அதிகளவிலான இழப்பைக் குறைக்கத் தங்கம் மற்றும் வெள்ளியின் மீது முதலீடு செய்தனர் இதனால் இன்று தங்கம் விலை இன்று 3 வருட உயர்வை எட்டியது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 67.95 ரூபாய் வரை உயர்ந்தது.


Click it and Unblock the Notifications