மும்பை: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதன் தாக்கம் பல நாட்களாகச் சந்தையில் நிலவிய நிலையில், இன்று சர்வதேச சந்தை இயல்பான வர்த்தக நிலைக்குத் திருப்பியது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் 7வது சம்பள கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு புதன்கிழமை வர்த்தகத்தில் 250 புள்ளிகள் வரை உயர்ந்தது.

புதன்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் ஆசிய சந்தையின் லாபகரமான வர்த்தக நிலையில், சென்செக்ஸ் குறியீடு 100 புள்ளிகள் உயர்வில் வர்த்தகம் செய்யப்பட்டது. நிலையான வர்த்தகத்தில் இருந்து சென்செக்ஸ் 7வது சம்பள கமிஷன் ஒப்புதல் செய்திகள் வெளியான அடுத்தச் சில நொடிகளில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 215.84 புள்ளிகள் வரை உயர்ந்து 26,740.39 புள்ளிகளை எட்டியது. இதேபோல் நிஃப்டி குறியீடு 76.15 புள்ளிகள் உயர்ந்து 8,204.00 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications