மும்பை: இந்திய சந்தையில் எதிர்வரும் பருவ மழை, விவசாயத் துறை உற்பத்திகள், பொருளாதாரச் சீர்த்தங்கள் ஆகியவை நுகர்வோர் மற்றும் ஆட்டோமொபைல் சந்தையை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக இன்றும் மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 250 புள்ளிகள் வரை உயர்ந்த முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்திய சந்தையில் இருக்கும் சாதமான வாய்ப்புகளை எதிர்நோக்கி இன்று உள்நாட்டு முதலீட்டாளர்களும், பன்னாட்டுப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் அதிகளவில் முதலீடு செய்தனர்.
வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 145.19 புள்ளிகள் உயர்ந்து 5 நாள் தொடர் உயர்வில் 27,000 என்ற புள்ளிகளைத் தாண்டி இன்று 27,144.91 புள்ளிகளை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 40.60 புள்ளிகள் உயர்ந்து 8,328.35 புள்ளிகளை எட்டி வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications