மும்பை: பருவமழை, விவசாய உற்பத்தி, மத்திய அரசின் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கை ஆகியவற்றுடன் ஆசிய சந்தையின் லாப கரமான நிலை ஆகியவை இன்று மும்பை பங்குச்சந்தையின் நிலையான வர்த்தகத்திற்கு வழிவகுத்தது.
வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் லாபகரமாகத் துவங்கி மும்பை பங்குச்சந்தை இன்று 240 புள்ளிகள் வரை உயர்ந்தது.
ஐரோப்பிய பிரிட்டன் பிரிவில் ஏற்பட்ட சரிவில் இருந்து கடந்த 4 நாட்களாக மும்பை பங்குச்சந்தை நிலையான மற்றும் ஸ்திரமான வர்த்தக உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு ஆதாரமாகப் பருவமழை, விவசாய உற்பத்தி, மத்திய அரசின் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கை ஆகியவை வலிமை சேர்த்தது. இத்தகைய சாதகமான சூழ்நிலையிலும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாப்பாக ப்ளூ சிப் பங்குகளில் முதலீடு செய்தனர். இதனால் மும்பை பங்குச்சந்தை இன்று நிலையான வர்த்தகத்தைப் பெற்றது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் 150 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை இன்று 240 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதன்பின் வர்த்தக முடிவில் 133.85 புள்ளிகள் உயர்வில் 27,278.76 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் குறியீடும் இன்று நிலையான வர்த்தகத்தைப் பெற்று 42.35 புள்ளிகள் உயர்ந்து 8,370.70 புள்ளிகளை அடைந்தது. சர்வதேச சந்தைகளில் இன்று சீனா, ஷாங்காங், ஹாங்காங், தைவான், ஜப்பான் ஆஸ்திரேலியா உட்பட ஆசிய சந்தைகளில் அனைத்துச் சந்தைகளும் லாபத்தில் முடிவடைந்தது. ஆனால் ஐரோப்பா சந்தையில் இதன் நிலை வேறு, இங்கிலாந்து, யூரோப், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற முக்கியச் சந்தைகள் இன்னமும் சரிவிலேயே உள்ளது. இன்றைய நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 67.22 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வர்த்தகச் சந்தையில் 24கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 3,136 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் 22 கேரட் தங்கத்தின் விலை 2,901 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்றைய வர்த்தகச் சந்தையில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 51,220 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை
ப்ளூ சிப் பங்குகள்
சென்செக்ஸ்
நிஃப்டி
உலகச் சந்தை
நாணய மதிப்பு
தங்கம் விலை
வெள்ளி விலை


Click it and Unblock the Notifications