மும்பை பங்குச்சந்தையில் 6 நாள் தொடர் உயர்வில் இருந்து இன்று சரிவை தழுவியது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் அறிவிப்புகளை எதிர்நோக்கிய இன்று குறைவான அளவில் முதலீடு செய்தனர்.
இதனால் மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகத் துவக்கத்திலேயே வர்த்தகச் சரிவுடன் துவங்கியது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 111.89 புள்ளிகள் சரிந்து 27,166.87 புள்ளிகள் எட்டியது. இதேபோல் நிஃப்டி குறியீடும் 34.75 புள்ளிகள் இழந்து 8,335.95 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் கெயில், பவர்கிரின்டு, பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் 2.10சதவீதத்திற்கும் அதிகமான சரிவை எட்டியது. இதைத் தொடர்ந்து என்டிபிசி, ஹீரோமோட்டோ கார்ப், ஏசியன் பெயின்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி, ஒஎன்ஜிசி, ஆக்சிஸ் வங்கி, இன்போசிஸ், டிசிஎஸ், சிப்லா, லூப்பின் போன்ற முக்கியமான நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.
புதன்கிழமை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மும்பை பங்குச்சந்தை விடுமுறை அளித்துள்ளது.
உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நண்பர்களும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications