4 வருட உச்சத்தில் இருக்கும் தங்கத்தை இப்போது வாங்கலாமா..? வேண்டாமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2012ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 32,000 ரூபாயை எட்டியுள்ளது. இது கடந்த 4 வருடங்களில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதன் மூலம் கடந்த வருடம் தங்கத்தை வங்கியவர்களுக்குத் தற்போது 19 சதவீதம் அளவிலான லாபம் கிடைத்துள்ளது. சரி இப்போது தங்கத்தை வாங்கலாமா..? வேண்டாமா..? இதுவே பலரின் மனத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் முக்கியமான கேள்வி.

 

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மோசான வர்த்தக நிலையின் காரணமாகத் தற்போது தங்கம் மிகப்பெரிய முதலீடாகப் பார்க்கப்படுகிறது.

4 வருட உச்சத்தில் இருக்கும் தங்கத்தை இப்போது வாங்கலாமா..? வேண்டாமா..?

ஐரோப்பிய-பிரிட்டன் பிரிவு, அமெரிக் பெடரல் வங்கி வட்டி உயர்த்த முடியாத நிலை, உள்நாட்டு உற்பத்தியில் மோசமான நிலையை அடைந்த ஜப்பான், பொருளாதாரச் சரிவில் தொங்கும் சீனா, கச்சா எண்ணெய் விலை சரிவு, மந்தமான பங்குச்சந்தை வர்த்தகம், நாணய பரிமாற்றத்தில் நிலையற்ற தன்மை எனப் பல வழிகளில் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது சர்வதேச பொருளாதாரம்.

இந்நிலையில் முதலீட்டாளர்கள் பல்வேறு சந்தைகளில் வைத்திருக்கும் முதலீட்டைப் பாதுகாக்க தற்போது இருக்கும் ஓரே வழி தங்கம் தான். இதன் காரணம் தான் தங்கம் விலை தற்போது 4 வருட உச்சத்தை எட்டியுள்ளது.

நாணய சந்தையில் தற்போது தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1,360 டாலராக இருக்கிறது. அடுத்த 2 மாதங்களில் இதன் விலை 1,400 டாலரை வரையும் எட்டும் எனவும் கணிப்புகள் தெரிவிக்கிறது. இதே பொருளாதார நிலை தொடர்ந்து நீடித்தாலோ அல்லது மேலும் மோசம் அடைந்தாலோ தங்கத்தின் விலை 1,500 டாலர் என இமாலய விலையை எளிதில் எட்டும் எனவும் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

4 வருட உச்சத்தில் இருக்கும் தங்கத்தை இப்போது வாங்கலாமா..? வேண்டாமா..?

ஆனால் சந்தை அனைத்துப் பாதிப்புகளில் இருந்து தற்போது மீண்டு வரத் துவங்கியுள்ளது. குறிப்பாகப் பிரிட்டன் ஐரோப்பிப் பிரிவு, சீனா சந்தை சரிவு ஆகியவற்றால் மிகப்பெரிய பாதிப்பை அடைந்த இந்திய சந்தை ஆகியவை தற்போது நிலையான வர்த்தகத்தைப் பெற துவங்கிவிட்டது.

இதனால் தங்கம் விலை உயரக் குறைந்த அளவிலான வாய்ப்புகள் மட்டும் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது. குறுகிய கால நோக்கில் வேண்டுமானால் தங்கம் மீது முதலீடு செய்யலாம். நீண்ட முதலீடாகத் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்த முடிவாக இருக்காது.

திருமணம் போன்ற முக்கியக் காரணங்களுக்காகத் தங்கத்தை வாங்காமலும் இருக்க முடியாது. எனவே தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்யும் முன் ஒரு முறைக்குப் பல முறை யோசித்து முதலீடு செய்யுங்கள்.

4 வருட உச்சத்தில் இருக்கும் தங்கத்தை இப்போது வாங்கலாமா..? வேண்டாமா..?

இன்று 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 3,185 ரூபாயாகவும், 22 கேரட் 1 கிராம் 2,987 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் பிற முக்கிய முதலீட்டுச் செய்திகள் குறித்துத் தெரிந்துகொள்ளத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைத் தொடர்ந்து படியுங்கள். பேஸ்புக் பக்கத்தில் இணைந்திட இதைக் கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bullion prices hit four-year high, time for gold rush?

For the first time since 2012, gold prices inched close Rs 32,000 per 10 gram (Rs 31,953) on July 6, marking an annual return of nearly 19%.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X