கோகோ கோலா நிறுவனத்தின் முதல் பெண் தலைமை நிதியியல் அதிகாரி..!

டெல்லி: உலகின் முன்னணி குளிர்பான விற்பனை நிறுவனமான கோகோ கோலா தனது இந்திய கிளையின் தலைமை நிதியியல் அதிகாரி பதவியில் முதல் முறையாக ஒரு பெண்ணை நியமித்துள்ளது.

சர்விதா சேதி

சர்விதா சேதி

கோகோ கோலா நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென் மேற்கு ஆசியாவின் நிதியியல் பிரிவின் துணைத் தலைவரான சஞ்சீவ் குமார் பதவியில் சர்விதா சேதி அவர்களை மத்திய மற்றும் தென் ஐரோப்பிய சந்தையில் வர்த்தக நிதியியல் தலைவராக நியமித்துள்ளது கோகோ கோலா நிர்வாகம்.

படம்: பிஸ்னஸ் ஸ்டேன்டர்ட்

 

 உயர் மட்ட குழு

உயர் மட்ட குழு

கோகோ கோலா இந்தியா மற்றும் தென் மேற்கு வர்த்தகப் பிரிவின் தலைவராக இருக்கும் வெங்கடேஷ் கினி தலைமையிலான உயர் மட்ட குழுவில் முதல் முறையாக ஒரு பெண் ஆகச் சர்விதா சேதி இணைந்துள்ளார்.

இக்குழுவில் இருக்கும் ஓரே ஒரு பெண் அவர் தான்.

 

சஞ்சீவ் குமார்

சஞ்சீவ் குமார்

இந்நிலையில் தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க வர்த்தகப் பகுதியின் நிதியியல் பிரிவின் தலைவராகச் சஞ்சீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் சுமார் 35 நாடுகளின் வர்த்தகம் செயல்படப் போகிறது.

பெப்ஸி நிறுவனம்

பெப்ஸி நிறுவனம்

கோகோ கோலா நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான பெப்ஸி நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகத் தலைவராக இருப்பது பெண். இதே பாணியில் கோகோ கோலா நிறுவனத்தின் இணைத்து வர்த்தகப் பிரிவின் உயர் மட்ட குழுவில் பெண் அதிகாரிகளை நியமிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்திரா நூயி

இந்திரா நூயி

பெப்ஸி நிறுவனத்தின் தலைவராக இருப்பது பெண் என்பதிலும், அவர் இந்தியர் என்பதிலும் நாம் பெருமை அடைய வேண்டும். அதிலும் அவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெயல் இந்திரா நூயி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+