தங்கத்தை மலை மலையாய் குவித்து வைத்திருக்கும் டாப் 10 நாடுகள்..!

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தங்க ஆசையினால் வாழ்வைத் தொலைத்தவர் பலர். எனினும் தங்கம் மிக விலைமதிப்பற்றதாகவும், எல்லோராலும் மிகவும் விரும்பப்படும் உலோகங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது. அது பழங்காலம் தொட்டு நம்முடைய நாகரீகத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது.

பண்டைய வரலாற்றை உற்று நோக்கும் பொழுது எவர் ஒருவர் உலோகத்தைச் சரியாகக் கையாண்டு வந்திருக்கின்றாரோ அவரே வெற்றியைச் சுவைத்திருக்கின்றார்.

பழங்காலம் தொட்டுத் தங்கம் ஒரு பாதுகாப்பான சேமிப்பாகக் கருதப்படுகின்றது. மேலும் காகிதப் பணம் புழக்கத்திற்கு வருவதற்கு முன் தங்கமே ஒரு நாட்டின் நாணயமாக இருந்தது. தற்காலத்தில் காகித நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும் ஒரு நாட்டின் தங்க கையிருப்பே அந்த நாணயத்தின் மதிப்பை நிர்ணயிக்கின்றது. இதனால் பல்வேறு நாடுகளும் தங்கத்தைச் சேமித்து வருகின்றன.

எனவே நாங்கள் உங்களுக்கு 2015ல் அதிக அளவு தங்கத்தை இருப்பு வைத்துள்ள முதல் 10 நாடுகளைப் பற்றித் தெரிவிக்க விரும்புகின்றோம்.

10. இந்தியா

10. இந்தியா

இந்தியாவின் கையிருப்பில் சுமார் 557.7 டன் தங்கம் உள்ளது. இது நாட்டின் சேமிப்பில் சுமார் 6.7 சதவீதம் ஆகும்.

2009 ஆம் ஆண்டில், இந்தியா வெளிநாட்டுச் சந்தைகளில் இருந்து சுமார் 200 டன் தங்கத்தை வாங்கியது. இந்தியத் தங்கம் பெரும்பாலும் இந்திய பெண்களுக்கான வடிவமைக்கப்பட்ட அல்லது வடிவமைக்கப்படாத நகைகளைச் செய்யப் பயன்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் தங்கக் கையிருப்பு விரிவடைந்துள்ளது.

 

9. சீனா

9. சீனா

அதிகமான தங்க கையிருப்பு உடைய மற்றொரு முக்கியமான நாடு சீனா ஆகும். இதனுடைய மொத்த தங்க கையிருப்பு சுமார் 1054.1 டன் ஆகும். இது அதன் மொத்த சேமிப்பில் சுமார் 1 சதவீதம் ஆகும். 2009 ஆம் ஆண்டு அறிக்கை, சீனா அதன் தங்க கையிருப்பை இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது. ஸிஜின் நிறுவனம் சீனாவின் மிக முக்கியச் சுரங்க அமைப்பு ஆகும்.

8. ரஷ்யா

8. ரஷ்யா

ரஷ்யாவின் மொத்த தங்க கையிருப்பு சுமார் 1,208.2 டன் ஆகும். இது அதன் மொத்த சேமிப்பில் சுமார் 12.2சதவீதம் ஆகும். ரஷ்யாவில் தங்கம், வெள்ளி, வைரம், மற்றும் விலையுயர்ந்த கற்கள், போன்ற பல இயற்கை வளங்கள் உள்ளன. ஒரு சில ஆண்டுகளுக்கு முன், நாட்டின் மத்திய வங்கியானது, அதனுடைய முக்கியக் கடைகளுக்குச் சுமார் எழுபத்தி ஏழு டன் தங்கத்தை வழங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன், ரஷ்யா தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களைச் சுமார் 160 டன் வாங்கியது.

7. பிரான்ஸ்

7. பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் மொத்த தங்க கையிருப்பு சுமார் 2435.4 டன் ஆகும். இது அதன் மொத்த சேமிப்பில் சுமார் 65.6 சதவீதம் ஆகும். இதனுடைய தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 145 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டில் பல்வேறு தங்கச் சுரங்கங்கள் உள்ளன. அது முதன்மை நிதி நிறுவன தங்க ஒப்பந்தத்தில் இருந்து சுமார் 572 டன் தங்கம் வழங்கியது.

6. இத்தாலி

6. இத்தாலி

இத்தாலியின் மொத்த தங்க கையிருப்பு சுமார் 2451.8 டன் ஆகும். இது அதன் மொத்த சேமிப்பில் சுமார் 66.6 சதவீதம் ஆகும். இத்தாலிய பெண்களின் விலைமதிப்பற்ற மற்றும் பெரிய தங்க நகை மீதான காதல் இந்த உலகம் முழுவதும் பிரபலமானது. இத்தாலியில், தங்கச் சுரங்கங்களுக்குப் பஞ்சமே இல்லை. மற்றும் இத்தாலிய அரசு அவற்றில் இருந்து விலைமதிப்பற்ற தங்கத்தைப் பத்திரமாக வெளியே கொண்டுவருவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

5. ஜெர்மனி

5. ஜெர்மனி

ஜெர்மனியின் மொத்த தங்க கையிருப்பு சுமார் 3384.2 டன் ஆகும். இது அதனுடைய மொத்த சேமிப்பில் சுமார் 67 சதவீதம் ஆகும். 2014 ஆம் ஆண்டில், ஜேர்மன் மத்திய வங்கியானது பாரிஸ் ல் இருந்து 35 டன்னும், பெரிய ஆப்பிள் இருந்து சுமார் 85 டன்களையும் ஃப்ராங்க்பர்டிற்குப் பரிமாற்றிக் கொண்டது. ஜெர்மனிக்கு ஆண்டுதோறும் தங்கத்தை டன் கணக்கில் வாங்கும் பழக்கம் எப்போதும் இருந்து வருகிறது.

4. அமெரிக்கா

4. அமெரிக்கா

தங்கத்தை இருப்பு வைத்திருக்கும் நாடுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது அமெரிக்கா. இதனுடைய மொத்த கையிருப்பு சுமார் 8133.5 டன் ஆகும். இது அதனுடைய மொத்த சேமிப்பில் சுமார் 72.6 சதவீதம் ஆகும். நியூமேனோன்ட் சுரங்கம் வருடந்தோறும் சுமார் 4.98 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை உற்பத்தி செய்யும் அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய சுரங்க நிறுவனம் ஆகும்.

3. நெதர்லாந்து

3. நெதர்லாந்து

நெதர்லாந்து நாட்டின் மொத்த தங்க கையிருப்பு சுமார் 612.5 டன் ஆகும். இது அதனுடைய மொத்த சேமிப்பில் சுமார் 55.2 சதவீதம் ஆகும். இந்த நாட்டில் உள்ள தங்க மற்றும் வெள்ளி சுரங்கங்கள், தங்கத்தை ஏராளமாக உற்பத்தி செய்தாலும், இந்த நாடு பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் தங்கத்தை வாங்குகின்றது. நெதர்லாந்தில், பல்வேறு வைர சுரங்கங்களும் உள்ளன.

2. ஜப்பான்

2. ஜப்பான்

ஜப்பான் தங்கத்தை அதிகமாக வைத்திருக்கும் மிக முக்கியமான நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன் மொத்த தங்க கையிருப்பு சுமார் 765.2 டன் ஆகும். இது அதனுடைய மொத்த சேமிப்பில் சுமார் 2.4 சதவீதம் ஆகும். இது சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தை அதிக விலையில் சர்வதேச சந்தைகளில் விற்கின்றது. இது ஜப்பானின் பொருளாதாரத்தை மிகவும் வலுப்படுத்தியுள்ளது.

1. சுவிட்சர்லாந்து

1. சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் மொத்த தங்க கையிருப்பு சுமார் 1040 டன் ஆகும். இது அதனுடைய மொத்த சேமிப்பில் சுமார் 7.7 சதவீதம் ஆகும். சில நாடுகளின் தங்க கையிருப்பானது ஐயத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதில் சுவிட்சர்லாந்து மிகவும் முக்கியமானதாகும். சுவிட்சர்லாந்து ஒரு அழகான பள்ளத்தாக்கு மட்டுமல்ல, பெரிய தங்க இருப்புக்களை ஒரே இடத்தில் வைத்திருக்கும் ஒரு இடமும் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 10 Countries with Largest Gold Reserves in 2015

Gold is one of most precious and highly demanding metals. It has always been a part of our fashion. The expense of gold has declined since 2014 in different parts of the world. Let us take a show of at the top 10 countries with largest gold reserves in 2015.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X