11 மாத உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை.. 500 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

மும்பை: சர்வதேச சந்தையில் நிலவிய சாதகமான சூழ்நிலையின் காரணமாக ஆசிய சந்தை மற்றும் இந்திய சந்தையில் இன்று அதிகளவிலான முதலீடும் வர்த்தகம் செய்யப்பட்டது.

திங்கட்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு ஓரே நாளில் 540 புள்ளிகள் வரை உயர்ந்து 11 மாத உச்சத்தை அடைந்தது.

யுஎஸ் ஜாப்ஸ் டேட்டா

யுஎஸ் ஜாப்ஸ் டேட்டா

அமெரிக்கச் சந்தையில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் பொருளாதாரம் தற்போது உயர்வு பாதையில் செல்லத் துவங்கியுள்ளது.

அதிபர் தேர்தல்

அதிபர் தேர்தல்

மேலும் நவம்பர் மாதத்தில் நடக்க உள்ள அதிபர் தேர்தல் முடிவுகள் இந்நாட்டின் வளர்ச்சி புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான்

ஜப்பான்

இதுமட்டும் அல்லாமல் சரிவில் தத்திளிக்கும் ஜப்பான் நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் தற்போது பிரதமரான ஜின்சோ அபே தலைமையிலான கட்சி வெற்றிபெற்றுள்ளது இதனால் ஜப்பான் நாட்டுப் பொருளாதாரம் வளர்ச்சி அடைய புதிய மற்றும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

காரணம்

காரணம்

ஜப்பான் நாட்டின் தேர்தல் முடிவுகளால் ஆசிய சந்தையும், அமெரிக்க வேலைவாய்ப்புகளால் ஐரோப்பிய சந்தையும் இன்றும் உயர்வடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

சர்வதேச சந்தைகளின் இத்தகைய சாதகமான சூழ்நிலையில் இந்திய பங்குச்சந்தையில் இன்று அன்னிய முதலீட்டு அளவு அதிகரித்துச் சந்தை வர்த்தகம் 11 மாத உச்சத்தை அடைந்துள்ளது.

முதலீடும் வர்த்தகமும்..

முதலீடும் வர்த்தகமும்..

திங்கட்கிழமை வர்த்தகம் துவக்கம் முதல் முடியும் வரை மும்பை பங்குச்சந்தை நிலையான வர்த்தகத்தை அடைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டு செய்தனர்.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 499.79 புள்ளிகள் உயர்ந்து 27,626.69 புள்ளிகளை அடைந்துள்ளது.

நிஃப்டி

நிஃப்டி

அதேபோல் நிஃப்டி குறியீடு 144.70 புள்ளிகள் உயர்ந்து 8,467.90 அடைந்து திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

தங்கம் விலை

தங்கம் விலை

இன்றைய வர்த்தகத்தில் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 2,958 ரூபாயாகவும், 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 3,180 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

 வெள்ளி விலை

வெள்ளி விலை

1 கிலோ பார் வெள்ளியின் விலை 51,168 ரூபாய் விலையில் சென்னையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

டாலர்

டாலர்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று, 67.19 ரூபாயாக நாணய சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+