மும்பை: ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (எச்டிஎஃப்சி), இந்தியாவின் முதல் மசாலா பத்திரங்களைத் பொது விற்பனைக்காக அறிவிக்க உள்ளது. நாட்டின் மிகப் பெரிய வீட்டுக்கடன் நிறுவனமான எச்டிஎஃப்சி, இப்பத்திரத்தின் வாயிலாக ரூ. 2,000 கோடி வரைத் நிதித்திரட்ட முடிவு செய்துள்ளது.

பின்னர் அத்திட்டத்தை நிறைவு செய்தவுடன் , மேலும் கூடுதலாக ரூ. 1,000 கோடியைத் திரட்டும் திட்டத்தையும் எச்டிஎஃப்சி தன்வசம் வைத்துள்ளது.
இந்த மசாலா பத்திரங்கள் செயற்கை ரூபாய் போன்றாது, ஏனென்றால் இவை சாதாராண ரூபாய் பத்திரங்கள் போல் அல்லாமல் வெளிநாட்டு பண பத்திரங்களுடன் கட்டமைக்கப்பட்டவை. எனவே முதலீட்டாளர்கள் 'ரூபாயாக முதலீடு செய்தாலும் அவர்களுக்கு வெளிநாட்டு பணமாக லாபம் பரிமாற்றம் செய்யப்படும்'.
இந்நிறுவனத்தின் முதல் மதிப்பிடப்படாத ரூபாய் நோட்டுகளுக்கு ஆக்சிஸ் வங்கி, கிரெடிட் சூசி மற்றும் நோமுரா ஆகியோரைக் கூட்டு புக் ரன்னர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளாக நியமித்துள்ளது.
உலக வங்கியின் கிளை முதலீட்டு நிறுவனமான சர்வதேச நிதிக் அமைப்பு முதன்முதலாக இத்தகைய ரூபாய் பத்திரங்களை வழங்கி இருந்தாலும், இந்தியாவில் எச்டிஎஃப்சி தான் முதன் முதலாக பொது மக்களின் முதலீட்டாக வழங்குகிறது.
இப்பத்திரங்களுக்குள் 3 வருடம் 1 மாதம் வரையிலான முதலீடு காலமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் லண்டன் பங்குச் சந்தையில் இத்திட்டத்தை பட்டியலிட எச்டிஎப்சி கோரிக்கை வைத்துள்ளது. சந்தை நிலவரங்களைப் பொருத்து வருகிற ஜூலை 15, 2016 அன்று இப்பத்திரத்தில் விலை முடிவு செய்யப்படும் என்று எச்டிஎஃப்சி நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஹெச்டிஎப்சி தலைவர் தீபக் பரேக் கூறுகையில் கடன் வாங்குவதை தவிர்க்க உலக முதலீட்டாளர்களிடம் இருந்து வகுக்கப்படாத ரூபாய் பத்திரங்களாக (Unreated rupee bonds) முதலீட்டை திரட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
இத்திட்டத்தை முதல் முறையாகச்அறிமுகப்படுடுவதன் மூலமாக முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளர்.
இத்திட்டத்திற்காக யெஸ் பேங்க் நிறுவனமும் லண்டன் பங்குச் சந்தையில் இத்திட்டத்தை பட்டியலிட விண்ணப்பித்தது, ஆனால் இது வரை எந்த அறிவிப்பு வெளிவரவில்லை.
அமெரிக்க பங்குப் பத்திரங்கள் சட்டத்தின் கீழ் இந்தப் மசாலா பத்திர திட்டம் பதிவுசெய்யப்படாது மற்றும் அமெர்க்காவிற்குள் விற்கவும் முடியாது.
இந்தப் பத்திரங்கள் சீனாவின் பண்டுகள் டிம் சும் எனவும், ஜப்பானிய பத்திரங்கள் சமுராய் எனவும் அந்தந்த நாட்டு உணவு மற்றும் கலாச்சாரத்தை ஒட்டிய பெயர்களாகப் பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications