மும்பை: டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் மற்றும் ஆசிய சந்தையில் நிலையான வர்த்தகத்தின் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தை நிலையான வர்த்தக உயர்வைச் சந்தித்து மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 130 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
புதன்கிழமை வர்த்தகத்தில் சந்தையில் டாப் 30 நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதால் நிஃப்டி குறியீடு நிலையான வர்த்தகத்தைப் பெற்றது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 126.93 புள்ளிகள் உயர்ந்து 27,942.11 புள்ளிகளை அடைந்தது. மேலும் அடுத்த 2 நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு வலிமையான நிலை எனக் கருதப்படும் 28,000 புள்ளிகளைக் கண்டிப்பாக எட்டி விடும். காரணம் நாளை இன்போசிஸ் நிறுவனத்தில் காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு இன்று நிலையான வர்த்தகத்தைப் பெற்று 45.50 புள்ளிகள் உயர்ந்து 8,565.00 புள்ளிகளை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications