பெங்களுரூ: நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் புதன்கிழமை 2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் மாத காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் சிறப்பானதாக இருந்ததால், சந்தைக் கணிப்புகளைத் தாண்டி டிசிஎஸ் நிறுவனத்தின் லாப அளவுகள் 6,318 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனுடன் பங்குதாரர்களுக்குச் சிறப்பான பரிசை வழங்கியுள்ளது டிசிஎஸ்.
லாபம்
என்.சந்திரசேகரன் தலைமை வகிக்கும் டிசிஎஸ் நிறுவனம் 2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சந்தைக் கணிப்புகளையும் தாண்டி 6,318 கோடி ரூபாய் லாபத்தை அடைந்துள்ளது. இது கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 0.36 சதவீதம் குறைவாக இருந்தாலும், இதன் அளவு சந்தை கணிப்புகளை விட அதிகமாகும்.
வருவாய்
2015ஆம் 4வது காலாண்டை ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 3 சதவீதம் உயர்ந்து 29,305 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டாலர் வருவாய் அளவுகளில் இதன் அளவு 3.7 சதவீதம் அதிகமாகும். ஏப்ரல் - ஜூன் மாத காலகட்டத்தில் டாலர் வருவாய் மதிப்பு 4,362 மில்லியன் டாலராக உள்ளது.
டிஜிட்டல் வருவாய்
டிசிஎஸ் நிறுவனத்தின் 15.9 சதவீத வருவாய் இந்நிறுவனத்தின் டிஜிட்டல் வர்த்தகம் மூலம் கிடைத்துள்ளது. இப்பிரிவு சார்ந்த தொழில்நுட்பத்தில் சுமார் 1.65 லட்சம் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
புதிய தொழில்நுட்பம்
வருவாய், லாப அளவில் உயர்விற்கு ஏற்ப நிறுவனம் சந்தை தேவைக்கு இணங்க கிளவுட், பிக் டேட்டா அண்ட் அனலிடிக்ஸ் பிரிவின் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது என என். சந்திரசேகரன் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.
ஊழியர்கள் வெளியேற்பு
கடந்த 3 காலாண்டுகளாக இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்பு அளவு குறைந்து வருகிறது. இது இந்நிறுவனத்தின் நிலையான வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்பு அளவு 13.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
ஜூன் 2016ஆம் ஆண்டு முடிவில் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 3.62 லட்சமாக உள்ளது. ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்நிறுவனத்தில் சுமார் 17,792 பேர் இணைந்துள்ளனர்.
முதல் காலாண்டு
இக்காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 20 மில்லியன் டாலர் திட்டத்தில் 6 வாடிக்கையாளர், 50 மில்லியன் டாலர் திட்டத்தில் 4 வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது.
பங்குதாரர்கள்
2016ஆம் ஆண்டு முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட டிசிஎஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 6.50 ரூபாய் என்ற ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.
பங்குகள்
இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 1.15 சதவீதம் உயர்ந்து 2,520.30 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
பிரிக்ஸிட்
மேலும் பிரிக்ஸிட் மூலம் டிசிஎஸ் நிறுவனம் இதுவரை எவ்விதமான பாதிப்புகளையும் எதிர்கொள்ளவில்லை என டிசிஎஸ் நிறுவனத்தின் சீஇஓ என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications