வீட்டுக் கடன் வழங்கும் எச்டிஎஃப்சி நிறுவனம் தனது முதல் மசாலா பத்திர திட்டத்தின் வாயிலாக வகுக்கப்படாத ரூபாய் பத்திரங்கள் (Unreated rupee bonds) மூலம் ரூ. 3,000 கோடியைத் திரட்டியது.

இப்பத்திரங்களுக்கு வருடத்திற்கு 7.875 சதவீதம் நிலையான வட்டியை முதலீட்டின் ஒவ்வொரு அரை ஆண்டிலும் அளிக்குறது. இதன்மூலம் 3 வருடம் 1 மாதம் வரையிலான முதிர்வு காலம் முடியும் போது 8.33 சதவீதமாக முதலீட்டளர்கள் பெறுவர்.
லண்டன் பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (எச்டிஎஃப்சி) நிறுவன மசாலா பத்திரங்கள் 4.3 மடங்கு அதிகமாக கோரப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
ஆர்பிஐ-யின் வழிகாட்டுதலின் படி வெளிநாடுகளில் இருந்து வகுக்கப்படாத ரூபாய் பத்திரங்கள் மூலம் முதலீட்டை திரட்டும் முதல் இந்திய கார்ப்ரேட்நிறுவனம் என்ற பெயரை எச்டிஎஃப்சி பெற்றுள்ளது.
இந்த மசாலா பத்திரங்கள் செயற்கை ரூபாய் போன்றது, ஏனென்றால் இவை அசல் ரூபாய் அல்ல ஆனால் வெளிநாட்டு பண பத்திரங்கள் கட்டமைக்கப்பட்டது. லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்தப் பத்திரங்களை உள்ளூர் இந்திய சந்தையில் வாங்க முடியாது.
2016, ஜூலை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் முதலில் 2,000 முதலீடும், ஆரம்ப அளவு எதிர்பார்ப்பைப் பொருத்து மேலும் ரூ.1,000 கோடி திரட்டப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications