மும்பை: இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய பாதிப்பை அளித்துள்ளது, சந்தைக்கணிப்புகளை விடவும் குறைவான லாபத்தை அடைந்த இன்போசிஸ் நிறுவனத்தால் மென்பொருள் துறையில் டிசிஎஸ், விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்தது.

இதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ப்ளூ சிப் பங்குகள் மீதான முதலீடு அதிகளவில் குறைந்து காணப்பட்டது. இதனுடன் ஆசிய சந்தையும் இன்று மந்தமாகச் செயல்பட்டதால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 200 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 105.61 புள்ளிகள் சரிந்து 27,836.50 புள்ளிகளை அடைந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 23.60 புள்ளிகள் குறைந்து 8,541.40 புள்ளிகளை எட்டிய இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications