ஐசிஐசிஐ வங்கி அதன் அகாடமியின் வாயிலாக ஒரு லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார், செய்தியாளர்களிடம் கூறுகையில் நல்ல வளர்ச்சி பெற, வாழ்வாதாரம், வாய்ப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் மனிதவள மேம்பாட்டுக்கண இடைவெளியை குறைப்பது மிக முக்கியம்.
எனவே ஐசிஐசிஐ வங்கி மார்ச் 2017 ஆம் வருடத்துக்குள்1 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள இளைஞர்கள் தானாக ஒரு நிலையான வாழ்வாதாரத்தைப் பெற அவர்களுக்கு இந்தப் பயிற்சி வழிவகுக்கும் என்றும் கூறினார்.
ஐசிஐசிஐ குழுவைப் பொருத்த வரை இந்தியாவின் மக்கள் தொகை அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய பலம் என்று கருதுகிறது.
ஐசிஐசிஐ அகாடமி வாயிலாக நலிந்த இளைஞர்களுக்குத் தொழில் பயிற்சி வழங்க அவர்களுக்கு ஒரு நிலையான வாழ்வாதாரத்தை அளிக்க அக்டோபர் 2013 ஆம் வருடம் ஐசிஐசி ஃபவுண்டேஷன் அரவணைத்த வளர்ச்சிக்காக ஐசிஐசி அகாடமியை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications