100 புள்ளிகள் வரை சரிந்த மும்பை பங்குச்சந்தை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் 18 சதவீத லாப உயர்வு, பருவமழை எதிர்பார்ப்பு, அன்னிய முதலீடு ஆகியவை மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தை லாபகரமான நிலையில் வைத்திருந்தது.

ஆனால் வர்த்தக முடிவில் முதலீட்டாளர்கள் லாப நோக்கித்திற்காக அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யத் துவங்கினர், இதனால் சென்செக்ஸ் குறியீடு 100 புள்ளிகள் வரை சரிந்தது.

100 புள்ளிகள் வரை சரிந்த மும்பை பங்குச்சந்தை..!

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 89.84 புள்ளிகள் சரிந்து 27,746.66 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு இன்று 32.70 புள்ளிகள் சரிந்து 8,508.70 புள்ளிகளை அடைந்து திங்கட்கிழமை வர்த்தகம் சரிவில் முடிவடைந்தது.

திங்கட்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டில் டாப் 30 நிறுவனங்களில் பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, இன்போசிஸ், சன் பார்மா, கோல் இந்தியா, எச்டிஎப்சி வங்கி ஆகிய நிறுவனங்கள் நிலையான வர்த்தகத்தில் லாபத்தைப் பெற்றது.

கெயில், எஸ்பிஐ, சிப்லா, டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல், ஒஎன்ஜிசி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex sheds 90 points on profit-taking; oil & gas, PSU stocks slip

The Sensex and Nifty ended lower for a second consecutive session as investors booked profits in recent outperformers, after rising earlier on positive sentiment due to a good monsoon.
Story first published: Monday, July 18, 2016, 17:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X