மும்பை: புதன்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் நிலையான லாப நோக்கித்தில் ப்ளூ சிப் பங்குகள் மீது அதிக முதலீடு செய்தனர் இதனால் சீரான வர்த்தக உயர்வுடன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 130 புள்ளிகள் வரை உயர்ந்தது.
இதுமட்டும் அல்லாமல் பருவமழை குறித்த சாதமான கணிப்புகள் முதலீட்டாளர்களைத் தொடர்ந்து இந்திய சந்தையில் முதலீடு செய்யத் தூண்டி வருகிறது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 128.27 புள்ளிகள் உயர்ந்து 27,915.89 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 37.30 புள்ளிகள் வரை உயர்ந்து 8,565.85 புள்ளிகளை அடைந்தது புதன்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
புதன்கிழமை வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் கோல் இந்தியா, டாக்டர் ரெட்டி, கெயில், சிப்லா, சன் பார்மா, ஹீரோமோட்டோ கார்ப், லுபின் ஆகிய நிறுவனங்கள் லாபத்தில் திளைத்தது.
இன்றைய வர்த்தகத்தில் விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் 1.97 சதவீதம் வரை சரிந்தது.


Click it and Unblock the Notifications