எச்டிஎப்சி மற்றும் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் வருவாய், வராக் கடன் அளவுகள் உயர்ந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தையில் வங்கித்துறை பங்குகள் அதிகளவில் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்வதேச சந்தை வர்த்தகத்தாலும் இன்றும் வர்த்தகம் சரிவை சந்தித்தது.
இன்றைய வர்த்தகத்தில் நிலையான வர்த்தகத்துடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையின் மந்தமான வர்த்தகம் மற்றும் வங்கித்துறை நிறுவனங்களின் வராக்கடன் அளவுகள் ஆகியவை பங்குச்சந்தை வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதித்தது.

இதன் எதிரொலியாக வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 205.37 புள்ளிகள் சரிந்து 27,710.52 புள்ளிகளை எட்டியது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 55.75 புள்ளிகள் குறைந்து 8,510.10 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது ஒரு மாத வர்த்தகச் சரிவை அடைந்தது.


Click it and Unblock the Notifications