தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிப் பங்குகளில் செய்யப்பட்ட அதிகப்படியான அன்னிய முதலீடு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் குறித்த சாதகமான வாய்ப்புகள் ஆகியவை மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டின் வர்த்தகத்தை 28,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கிய முதல் தொடர் உயர்வைச் சந்தித்த சென்செக்ஸ் குறியீடு 300 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வார வர்த்தகத்தில் மந்தமான வர்த்தகத்தைச் சந்தித்த சென்செக்ஸ் இன்று தொடர் உயர்வான வர்த்தகத்தைப் பெற்ற அசத்தியுள்ளது.

வாரத்தின் முதல் நாள் வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 292.10 புள்ளிகள் உயர்ந்து 28,095.34 புள்ளிகளை அடைந்துள்ளது. வர்த்தகம் துவங்கி 30 நிமிடங்கள் குறைவான வர்த்தகத்தைப் பெற்று வந்த சென்செக்ஸ் வங்கி நிறுவனப் பங்குகளில் செய்யப்பட்ட அதிகப்படியான முதலீடு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவை முதலீட்டாளர்களை அதிகளவில் முதலீடு செய்யத் தூண்டியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று 100 புள்ளிகள் வரை உயர்ந்தது. வர்த்தக முடிவில் நிஃப்டி 94.45 புள்ளிகள் உயர்ந்து 8,635.65 புள்ளிகளை அடைந்தது.
இன்றைய வர்த்தகச் சந்தையில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை லாபத்தைச் சந்தித்துள்ளது. குறிப்பாக 5 கோடி ரூபாய் அபராதம் பெற்ற பாங்க் ஆஃப் பரோடா வங்கி கூட இன்று 3.55 சதவீதம் உயர்ந்து 156.05 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications