வியாழக்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஜூலை மாதத்திற்கான ஆர்டர்கள் முடிவடைவதாலும், முதலீட்டாளர்கள் செய்த அதிகளவிலான ப்ளூசிப் பங்கு முதலீடுகளாலும், நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி சட்டத்தில் செய்ய மாற்த்திற்கு ஒப்புதல் கிடைத்ததின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் வரை உயர்ந்தது.
அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை மாற்றவில்லை என அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தையில் இன்று அதிகளவிலான அன்னிய முதலீடு குவித்துள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 184.29 புள்ளிகள் சரிந்து 28,208.62 புள்ளிகளை வரை உயர்ந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டியும் இன்று தொடர் உயர்வு நிலையில் 50.50 புள்ளிகள் உயர்ந்து 8,666.30 புள்ளிகள் அடைந்து 15 மாத உயர்வை அடைந்து வியாழக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் எல் அண்ட் டி, அதானி ஏர்போர்ஸ், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, டாக்டர் ரெட்டி, லூப்பின் போன்ற முன்னணி நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.


Click it and Unblock the Notifications