மும்பை: 2016ஆம் நிதியாண்டின் ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் நாட்டின் முன்னணி தனியார் வங்கியாக விளங்கும் ஐசிஐசிஐ வங்கியின் லாபம் 25 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இதேக்காலக்கட்டத்தில் 2,976 கோடி ரூபாயாக இருந்த மொத்த லாபத்தின் அளவு 2,232.5 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது, இதனால் இந்தியாவில் தனியார் வங்கிகளின் வர்த்தகம் மற்றும் சந்தை மதிப்புக் கேள்வி குறியாகியுள்ளது என்று கூறினாலும் தகும்.

வருவாய் அளவை ஒப்பிடும் போது பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் 5,158 கோடி ரூபாயாக ஜூன் மாத காலாண்டில் உள்ளது.
வங்கியில் வராக் கடன் உயர்வு மற்றும் சர்வதேச சந்தையில் வங்கியின் வர்த்தகம் அதிகளவிலா பாதித்துள்ளது இதன் காரணமாகவே லாபத்தின் அளவு 25 சதவீதம் வரை குறைந்துள்ளது என ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார் தெரிவித்தார்.

வங்கி ஒரு கடனை வராக் கடனாக முடிவு செய்துவிட்டால், இந்தக் கடன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் முழுமையாகத் தடைப்பட்டு விடும். இதுவே ஐசிஐசிஐ வங்கியின் லாப சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியது சரியா போச்சு.. இதைப் படிங்க


Click it and Unblock the Notifications