இந்தியாவின் லேமென் பிரதர்ஸாக ஐசிஐசிஐ, எஸ்பிஐ வங்கிகள்.. ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: 'லேமென் பிரதர்ஸ்', இந்தப் பெயரை எங்கோ கேட்டது போல் தோன்றுகிறதா? சரி தான் 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடியில் முழ்கிப்போன ஒரு அமெரிக்க முதலீடு நிறுவனம் தான் லேமென் பிரதர்ஸ்.

 

இதே போன்று இந்தியாவின் லேமென் பிரதர்ஸ் நிறுவனமாக ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கிகளை ரிசர்வ் வங்கி சித்தரித்துள்ளது. ஏன் அப்படி அறிவித்தது. வாங்க பார்ப்போம்...

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

2008ஆம் ஆண்டுப் பொருளாதார நெருக்கடிக்குப் பின் ரிசர்வ் வங்கி, இந்திய வங்கி அமைப்பில் D-SIB (Domestic Systemically Important Banks) என்னும் செயல்முறையைக் கொண்டு வந்தது. ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனம் முடங்குவதால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிநிலை பாதிக்கப்படும் நிலையில் இத்தகைய நிறுவனங்களை D-SIB பட்டியலில் இணைக்கப்படும்.

இதன் படியே ஐசிஐசிஐ, எஸ்பிஐ வங்கிகளை லேமென் பிரதர்ஸ் ஆக அறிவித்துள்ளது.

எப்படி வங்கிகள் முடங்கும்?

எப்படி வங்கிகள் முடங்கும்?

வங்கிகள் கடன் மற்றும் வர்த்தக அளவு பாதிக்கப்படும் நிலையில், அதனைச் சரிசெய்யும் அளவிற்கு வங்கியின் நிதிநிலை போதிய அளவிற்கு வலிமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் வங்கி முடங்கும் நிலை ஏற்படும்.

எஸ்பிஐ, ஐசிஐசிஐ
 

எஸ்பிஐ, ஐசிஐசிஐ

இந்நிலையில் இந்திய சந்தையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் வங்கிகளின் வர்த்தகம், இருப்பு அளவுகள் போன்ற பல காரணிகளைக் கணித்து ரிசர்வ் வங்கி 2015ஆம் நிதியாண்டுக்கான D-SIB பட்டியலில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ அறிவித்துள்ளது.

இதனால் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளின் பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி பதில்..

ஐசிஐசிஐ வங்கி பதில்..

எங்கள் வங்கி அமைப்பில் ஆபத்து காரணிகளை எதிர்கொள்ளும் அளவிற்குப் போதிய நிதி இருப்புகள் உள்ளதால் வங்கி செயல்பாடு எந்த வகையிலும் இந்திய பொருளாதாரத்தைச் சரிவு பாதைக்கு ஈட்டுச்செல்லாது என ஐசிஐசிஐ தெரிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டில்

2013ஆம் ஆண்டில்

ரிசர்வ் வங்கி 2013ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட D-SIB பட்டியலில் 4 முதல் 6வங்கிகளை ஆர்பிஐ இணைந்தது. இதன் மூலம் வங்கிகள் ஆபத்துகளை எதிர்கொள்ள அதிகளவிலான மூலதன இருப்பை வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றன.

ஏப்ரல் 1, 2016

ஏப்ரல் 1, 2016

இந்திய வங்கிகள் தங்களது மூலதன இருப்பை அதிகரிக்கும் சட்டம் வருகிற ஏப்ரல் 1, 2016 ஆம் ஆண்டு முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது.

வங்கிகள் நிலை..

வங்கிகள் நிலை..

D-SIB பட்டியலில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை இணைப்பதன் மூலம் இதன் லாப விகிதத்தில் பாதிப்பு இருக்காது என முன்னாள் எஸ்பிஐ வங்கித் தலைவர் பிரதீப் சவுதிரி தெரிவித்துள்ளார்.

இதை எப்படிச் சரி செய்வது..

இதை எப்படிச் சரி செய்வது..

இந்நிலையை எளிமையாகச் சரி செய்ய வங்கிகள் பங்குச்சந்தையில் தங்களது பொது விநியோக பங்குகளை அதிகரிப்பதன் மூலம் நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர இயலும்.

இதன்படி எஸ்பிஐ 0.8 சதவீதம் வரை தங்களது பங்குகளை அதிகரிக்க வேண்டும். இதேபோல் ஐசிஐசிஐ வங்கி 0.2 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI names SBI, ICICI as 'too big to fail' banks

Reserve Bank of India (RBI) released its list of Domestic Systemically Important Banks on Monday. The list features names like State Bank of India(SBI) and ICICI Bank.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X