உலக அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தன. ஒவ்வொரு நாளும் தங்கமும் வெள்ளியும் புதிய புதிய வரலாற்று உச்சபட்ச விலையை தொட்டு சாமானிய மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்தன.
கடந்த ஜனவரி 29ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே வரலாற்று உச்சத்தை தொட்டன. இந்தியாவில் சில்லறை வணிகத்தில் 22 ஆபரண தங்கம் ஒரு சவரன் விலை 1.33 லட்சம் ரூபாய் என்ற அளவையும் ஒரு கிலோ வெள்ளி விலை 4.20 லட்சம் ரூபாய் என்ற வரலாற்று உச்ச பட்ச விலையும் தொட்டன. அதன் பிறகு பிப்ரவரி மாதம் முழுவதுமே விலை சரிந்தது. ஆபரண தங்கம் 1.12 லட்சம் முதல் 1.19 லட்சத்திற்கு உள்ளாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்தது.

ஆனால் மார்ச் மாத தொடக்கமே அதிரடியாக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் ஈரான் போர்பதற்றும் காரணமாக சென்னையில் வரலாற்றிலேயே இல்லாத அளவாக இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையை உயர்த்தி இருக்கிறார்கள். இந்த நிலையில் நாளைய தினம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என முதலீட்டு துறை நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஒரு மாதத்திற்கும் மேலாக அமைதியாக இருந்த வெள்ளியின் விலை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க போவதாக கணிக்கின்றன. உலக பங்குச்சந்தைகள் கமாடிட்டி சந்தைகள் விடுமுறையில் இருக்கும் சூழலில் டெத்தர் கோல்ட் எனப்படும் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட கிரிப்டோ டோக்கன் மதிப்பு 4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. எனவே நாளைய தினம் கோமெக்ஸ் வர்த்தகத்திலும் சரி இந்தியாவின் எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் சரி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல மடங்கு உயரும் என நிபுணர்கள் கணிப்பு வெளியிடுகின்றனர்.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 5300 டாலர் என்று அளவை எட்டி இருக்கிறது நாளை விலை இதனை கடந்தால் இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராம் விலை 1.70 லட்சம் வரை செல்லும் என கணிப்பு வெளியிடுகின்றனர். வெள்ளி விலை கிலோ 3 லட்சம் வரை செல்லக்கூடும் என கணிப்பு வெளியிடுகின்றனர். வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகம் முடியும்போது இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1.62 லட்சமாகவும் வெள்ளியின் விலை கிலோ 2.82 லட்சம் ரூபாயாக இருந்தது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 100 டாலர்கள் எட்டும் போது இந்தியாவில் வெள்ளி விலை முன்பை போல வேகமெடுக்கும் என கூறுகிறார் ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட் தலைவர் ஹரிஷ் தெரிவிக்கிறார். ஈரான் பதற்றம் நீடிக்கும் பட்சத்தில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் வெள்ளி விலை 2 லட்சத்தை கடக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தால் சில்லறை வணிகத்திலும் உயரும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications