பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் வெளியிட்ட வீடியோவில், தங்கம் மற்றும் வெள்ளி சந்தையின் தற்போதைய நிலை குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. உலகளாவிய பதற்றம், ஹோர்முஸ் நீரிணை பிரச்சனை, எண்ணெய் விலை உயர்வு, டாலர் இயக்கம் ஆகியவை இணைந்து இந்திய தங்க சந்தையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்கியுள்ளார்.

"தங்கம் ஏறினாலும், இந்தியாவில் டிஸ்கவுண்ட்"
உலக சந்தையில் தங்கட்கிழமை வர்த்தகத்தில் தங்கம் (Gold) பலமாக உயர்ந்துள்ள நிலையில், இந்திய மார்க்கெட்டில் 24 கேரட் தங்கம் விலை குறைந்து ரூ.17,084 அளவில் இருக்கிறது. ஆனாலும் ரீடைல் சந்தையில் கேஷ் டிரான்சாக்ஷனில் தங்கம் வாங்கும் போது ரூ.300-ரூ.400 வரை குறைவாக கிடைப்பதாக அவர் குறிப்பிட்டார். "கோல்ட் மார்க்கெட் ரொம்ப டைட்டா இருக்கு; தங்கம் இருக்கிறது, ஆனால் கேஷ் இல்லை" என்பதே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
அதாவது, சந்தையில் லிக்விடிட்டி (cash flow) குறைவு இருப்பதால் தங்கம் விலை தற்காலிகமாக டிஸ்கவுண்டில் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் சுமார் ரூ.13,400 அளவில் இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நிலை நீடித்தால் தற்காலிக விலை வேறுபாடு தொடரலாம் என மதிப்பிடப்படுகிறது.
"வெள்ளி பக்கம் போகாதீர்கள்"
வெள்ளி (Silver) நேற்று உயர்ந்த நிலையில் இருந்தாலும், இன்று வர்த்தக சந்தையில் சரிவைக் காட்டியதாக அவர் கூறினார். "இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வெள்ளியில் மாட்டிக் கொண்டவர்கள் வெளியேறுங்கள்; மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்" என எச்சரித்தார். அதாவது, வெள்ளி சந்தையில் அதிக அதிர்வு (volatility) இருப்பதால் குறுகிய காலத்தில் அபாயம் அதிகம் என அவர் விளக்கம் அளித்தார்.
ஹோர்முஸ் நீரிணை, ஏர் ஸ்பேஸ் மூடல் - சப்ளை பாதிப்பு
தங்கம் மற்றும் வைரம் இந்தியாவுக்கு பெரும்பாலும் துபாய் வழியாக வருகிறது. இந்த தங்கம் மற்றும் வைரம் இந்தியாவுக்கு ஹோர்முஸ் நீர் வழி மற்றும் வளைகுடா நாடுகளின் விமானங்கள் மூலம் வருகிறது. தற்போது ஹோர்முஸ் நீர் வழியில் போக்குவரத்து மொத்தமாக நிறுத்தபட்டு உள்ளது. இதேபோல் விளைகுடா நாடுகளில் ஏர் ஸ்பேஸ் மூடப்பட்டு உள்ளது.
இதனால் Qatar Airways, Emirates போன்ற முக்கிய விமான நிறுவனங்கள் சேவைகள் முழுமையாக நிறுத்தியுள்ளன. இதனால் "குருவி" (விமான சரக்கு) வழியாக தங்கம் கொண்டு வருவது குறைய வாய்ப்பு உள்ளது என ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறினார்.
இந்த நிலை 10 நாட்கள் தொடர்ந்து நீடித்தால், இந்தியாவில் தங்கம் தட்டுப்பாடு உருவாகி, இதன் விலை பிரீமியத்தில் (premium) டிரேட் ஆகத் தொடங்கும் சாத்தியம் உள்ளது என்று அவர் கூறினார். ஆனால் அதற்கு சில நாட்கள் ஆகும் என்பதும் அவரது கணிப்பு.
எண்ணெய் 10% ஏற்றம்
ஹோர்முஸ் நீரிணை வழியே தான் பெரும்பாலான கப்பல் சரக்குகள், குறிப்பாக கச்சா எண்ணெய், உலக நாடுகளுக்கு செல்கிறது. கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் கச்சா எண்ணெய் விலை நேரடியாக உயரும். ஏற்கனவே கச்சா எண்ணெய் சுமார் 10% உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் உர விலை (fertilizer cost) கூடும். ஆனால் உள்நாட்டில் உடனடியாக விலை உயர்த்த முடியாத சூழலில், அரசின் பட்ஜெட் டெபிசிட் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் ரூபாய் பலவீனமாகும் வாய்ப்பு அதிகம். ரூபாய் பலவீனமானால், தங்கம் இயல்பாக விலை உயரும்.
டாலர், ஐடி சேவைகள், ரூபாய்
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பை ஆர்பிஐ தலையீட்டின் வாயிலாக சமீபத்தில் 90 வரை குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 91.39 நிலைக்கு திரும்பியுள்ளதாக. ஏஐ தாக்கம், மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சனை ஆகியவற்றின் காரணமாக பங்குச் சந்தை முழுவதும் அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறினார். இந்த சூழலில், ஐடி சேவைகள் துறை பலவீனமாக இருந்தால், ரூபாய் மேலும் வேகமாக மதிப்பு இழக்கக்கூடும். அதனால் டாலர்-ரூபாய் விகிதம் "செஞ்சுரி" நோக்கி நகரும் சாத்தியம் உருவாகலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த 10 நாட்கள்
தங்கம் விலை உயர்வுக்கு உலோகத்தின் ஷார்ட்டேஜ் காரமில்லை; பிரச்சனை கேஷ் ப்ளோ. ஆனால் ஹோர்முஸ் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பாமல், விமான மற்றும் கடல் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டால், இந்தியாவில் தங்கம் டிஸ்கவுண்டிலிருந்து பிரீமியமாக மாறும் சாத்தியம் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?



Click it and Unblock the Notifications