இறுதிக்கட்ட ஆலோசனையில் ஜிஎஸ்டி மசோதா.. 7 நாட்களில் அமலாக்கம் செய்யப்படும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் குறித்த இறுதிக்கட்ட மாற்றங்கள் செய்த அறிக்கையை ராஜ்ய சபா உறுப்பினர்களின் மத்தியில் ஆலோசனைக்குச் சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையில் உறுப்பினர்கள் மட்டும் அல்லாது அரசு அதிகாரிகளும் மத்திய அரசுடன் இறுதிக்கட்ட ஆலோசனைக்குத் தயாராகி வருகின்றனர்.

மத்திய அரசு இந்த வாரத்தில் ஜிஎஸ்டி வரி முழுமையாக அமலாக்கம் செய்யப்படும் எனக் குறிப்பிட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் அமலாக்கும் குறித்த விவாதம் முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இறுதிக்கட்ட ஆலோசனையில் ஜிஎஸ்டி மசோதா.. 7 நாட்களில் அமலாக்கம் செய்யப்படும்?

ஜிஎஸ்டி வரி அமலாக்கும் குறித்துப் பல சந்தேகங்கள் மற்றும் பாதிப்புகள் உள்ளதாக எதிர்க்கட்சியினர் மத்திய அரசைக் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்த குறிப்புகளை அனைத்துத் தரப்பினரும் எடுத்து வரும் நிலையில், முழுமையான விவாதத்திற்குப் பின்னரே அமலாக்கம் செய்யப்படும் என அமைச்சர் கூறினார்.

கடந்த 7 நாட்களில் ஜிஎஸ்டி மசோதா மாநில நிதி தலைவர்கள் அமைச்சர்களின் பரிந்துரையின் படி பல மாற்றங்களைச் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எவ்விதமான பாதிப்புகளும் இல்லாத ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற உள்ளதாக மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இப்புதிய மாற்றத்தில் முக்கியமாக மாநிலங்கள் மத்தியிலான சரக்கு விநியோகத்தில் மாநில அரசு தனக்கான வரி வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் 1 சதவீத வரியைக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜிஎஸ்டி மசோதாவில் தமிழக அரசுக்கு முக்கியப் பிரச்சனைகள் உள்ளதாகக் கருத்து தெரிவித்த நிலையில், மத்திய அரசு தமிழக அரசு மற்றும் உயர் நிதித்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈட்டுப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GST in last lap as govt circulates new draft of the Bill to Elders

With the BJP-led government circulating the draft of changes to the Constitution Amendment Bill on GST to Rajya Sabha members, political parties have started preparations for a final round of negotiations with the Centre.
Story first published: Monday, August 1, 2016, 14:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X