ஒருவழியாகச் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா கடைசி கட்டத்திற்கு வந்துள்ளது. புதன்கிழமை இன்று ராஜ்ய சபாவில் ஜிஎஸ்டி மசோதா பற்றிய விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.
சுதந்திரம் பெற்ற பிறகு மிகப்பெரிய வரி சீர்திருத்தம் மற்றும், ஒரு தேசம் ஒரு வரி ஆட்சி என 29 மாநிலங்களுக்கும் ஒரே வரியாக வர இருக்கிறது ஜிஎஸ்டி.
இதற்காக 29 மாநில முதல்வர்களும் அவர்கள் கட்சியின் அவை உறுப்பினர்களை கண்டிப்பாக இந்த விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
எனவே இந்த முறை எப்படியும் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டுவிடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஜிஎஸ்டி வரியால் எந்தெந்த பொருட்கள் விலை உயரும்..? எந்தெந்த பொருட்கள் விலை குறையும்..? என்பது பற்றி நாம் இங்குப் பார்ப்போம்.
ஆட்டோமொபைல்
சிறிய ரக கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள், எஸ்யூவி-கள் பொன்ற வாகனங்கள் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார் பேட்டரி
கார் பேட்டரிகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
திரைப்பட டிக்கெட்
திரைப்பட சீட்டுகளுக்கான கேளிக்கை வரி மிக அதிகமாக உள்ளது, ஜிஎஸ்டி 18 சதவீதமாக இருக்கும் போது மல்டிப்ளக்ஸ் போன்ற நிறுவனங்களும் விலையைக் குறைத்தல் டிக்கெட் விலை குறைய வாய்ப்புள்ளது.
பிற எலக்ட்ரானிக் பொருட்கள்
ஃபேன், லைட், வாட்டர் ஹீட்டர், ஏசி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் விலை குறையலாம்.
புகையிலை
புகையிலை மீதான ஜிஎஸ்டி விகிதம் அதிகப்படுத்துவதால் புகையிலை பொருட்கள், சிக்ரெட் விலை உயர வாய்ப்புள்ளது.
வணிக வாகனங்கள்
ட்ரக், பேருந்து பொன்ற வணிக வாகனங்கள் விலை உயரும்.
சேவை வரி
சேவை வரி உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மொபைல் பில் கட்டணங்கள் உயரும்.
ஆடம்பர பொருட்கள்
ஜவுளி, ஆடம்பர நகை போன்ற பொருட்கள் விலை உயரலாம்.
இலவசமாக வருமான வரி தாக்கல்
இலவசமாக வருமான வரி தாக்கல் செய்ய ஒன் ஸ்டாப் சொல்யூஷன் -தமிழ் குட்ரிட்டன்ஸ்
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications