இந்தியாவில் மறைமுக வரியின் மூலம் நிறுவனத்தின் விநியோக முறை மிகப்பெரிய அளவில் மாறினாலும் அதற்கு அதிகளவிலான வரியும், வருவாய் இழப்பையும் நிறுவனங்கள் சந்தித்து வருகிறது. இந்த வரியால் மாநில அரசுகளுக்கு அதிகளவிலான லாபம் இருந்தாலும், இது இந்திய நிறுவனங்களின் வர்த்தக விரிவாக்கத்திற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது.
இத்தகைய பிரச்சனையைக் களைய வருவது தான் ஜிஎஸ்டி மசோதா. ஆனால் ஜிஎஸ்டி மசோதா வடிவமைப்பிலும் அரசியல் உள்ளதா என்ற சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வரியும்.. வருமானமும்...
இந்தியாவில் நேரடி வரி மற்றும் மறைமுக வரி விதிப்பின் மூலம் மத்திய அரசு சுமார் 14.6 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தைப் பெறுகிறது. இதில் 34 சதவீதம் மறைமுக வரியாகும்.
2.8 லட்சம் கோடி கலால் வரி, 2.1 லட்சம் கோடி சேவை வரியாகும். ஜிஎஸ்டி மசோதா இன்று நாடாளுமன்றத்தில் நடக்க இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டால் மொத்த மறைமுக வரி விதிப்பும் மாறுபடும். இதில் கலால் வரி, மாநில அரசு விதிக்கும் வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி, சேவை வரி ஆகியவையும் அடங்கும்.
ஜிஎஸ்டி மசோதாவால் யாருக்கு லாபம் என்பதைப் பார்க்கும் முன் இந்தியாவில் இருக்கும் வரி விதிப்பு பற்றி நாம் முழுமையாகத் தெகரிந்துக்கொள்ள வேண்டும்.
நாடுகளும்.. வரி விதிப்பும்
பொதுவாக வரி விதிப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மையமாக வைத்து நிர்ணயம் செய்யப்படும். வளரும் நாடுகளில் மறைமுக வரி அதிகளவில் இருக்கும் வல்லரசு மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் மறைமுக வரி விதிப்பு மிகவும் குறைவாக இருக்கும்.
உதாரணமாக ஆஸ்திரேலியாவில் மொத்த வரி வசூல் தொகையில் 13 சதவீதம் மட்டுமே மறைமுக வரி, இந்தியாவில் இதன் அளவு 34 சதவீதம்.
இதற்கு இடமில்லை..
ஜிஎஸ்டி மசோதாவின் முன்றிக்கையைப் பார்க்கும் போது, இந்த விரி விதிப்பில் விலக்கும் அளிக்கப்பட்டுள்ள அல்லது ஜிஎஸ்டி மசோதா பொருந்தாத சில பொருட்கள் உள்ளது. அவை..
1. பெட்ரோலியம் பொருட்கள்
2. பொழுதுபோக்கு மற்றும் தீம் பார்க் வரி விதிப்பு மற்றும் பஞ்சாயத், நகராட்சி / மாவட்ட சபை வசூல் செய்யும் வரி
3. மதுபானத்திற்கு விதிக்கப்படும் வரி
4. முத்திரைத் தாள் கட்டணம்
5. கஸ்டம்ஸ் வரி
6. மின்சாரம் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குச் செலுத்தப்படும் வரி.
பணவீக்கம்
தற்போது நாடாளுமன்றத்தில் பல புதிய மாற்றங்களுடன் சம்ர்பிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி மசோதாவில் சரக்குப் பொருட்கள் மீது effective tax அதிகளவில் குறையும். நுகர்வோர் பணவீக்கத்தில் 70-75 சதவீதம் சரக்குப் பொருட்களைச் சார்ந்துள்ளது.
இதனால் நுகர்வோர் பணவீக்கம் அதிகளவில் குறையும்.
சேவைத் துறை
நுகர்வோர் பணவீக்கத்தில் சேவை வரிப் பிரிவு தோராயமாக 25-30 சதவீதத்தைச் சார்ந்துள்ளது. சேவை வரித்துறையின் முக்கியப் பங்கு ஹவுசிங், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு துறையைச் சார்ந்துள்ளது.
ஆனால் பெரும்பாலான சேவை வரிக்கும் (சிபிஐயில் 12 சதவீத சேவைக்கு) ஜிஎஸ்டி மசோதாவில் வரி விலக்கு செய்யப்பட்டுள்ளதால் பணவீக்கத்தில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது எனவும் கருத்து நிலவுகிறது.
இதனால் ஜிஎஸ்டி மசோதா அமலாக்கம் செய்தாலும் பணவீக்கத்தில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது எனக் கணிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு லாபம்
இந்தியாவில் மிகப்பெரிய தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி மசோதா மூலம் மிகப்பெரிய லாபம். ஏனென்றால் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள முதல் சரக்கு பொருள் பொட்ரோலியம் பொருட்கள்.
மின்சாரம்
பொட்ரோலியம் பொருட்களுக்கு பின் மிகமுக்கியமாக பார்க்கப்படுவது மின்சாரம். கடந்த சில மாதங்களாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்பரா மின்சார உற்பத்தியில் அதிகளவில் முதலீடு செய்து உற்பத்தியை அதிகரித்து வருகிறது.
இத்துறையில் ரிலையன்ஸ் மட்டும் அல்லாமல் லேன்கோ, ஜின்டால், போன்ற பல நிறுவனங்கள் லாபம் அடையும். இதுவும் கபாலி பட பாணியில் அரசியல் தானா என்ற சந்தேகம் எழுகிறது.
ஆட்டோமொபைல்
இத்துறையில் தற்போது Effective Taxஆக 30-47 சதவீதம் வரை உள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் இந்த விரி விதிப்பின் அளவு 20-22 சதவீதமாகக் குறையும்.
இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஆட்டோமொபைல் சார்ந்து நிறுவனங்களும் நீண்ட கால நோக்கில் அதிகளவிலான லாபம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இத்துறையின் லாஜிஸ்டிக்ஸ் கான வரிச் செலவுகள் 30-40 சதவீதம் வரை குறையும்.
நுகர்வோர் பயன்பாடுகள்
தற்போது நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்களுக்கு 7 முதல் 30 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை மத்திய அரசிடம் இருந்து எவ்விதமான வரி விலக்கும் பெறாத நுகர்வோர் நிறுவனங்கள் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் அதிகளவிலான லாபம் பெற உள்ளது.
இதனால் organised and unorganised எனப்படும் வகைப்படுத்தப்பட்ட வகைப்படுத்தப்படாத நிறுவனங்கள் மத்தியிலான தயாரிப்புகளின் விலை நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் கிராம்டன் கிரிவீஸ், ஹேவெல்ஸ், வோல்டாஸ், ப்ளூ ஸ்டார், பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ், சிம்போனி, ஹிட்டாசி ஆகிய நிறுவனங்கள் லாபத்தை எதிர்நோக்க உள்ளது.
எப்எம்ஜிசி
மத்திய அரசு ஏற்கனவே போதுமான சலுகைகள் அளித்துள்ள இத்துறை நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் கணிசமான லாபம் அல்லது எவ்விதமான லாபமும் அளிக்காது.
பர்னீசர் மற்றும் வீட்டு அலங்காரத்துறை
தற்போது இத்துறை நிறுவனங்கள் இத்துறை நிறுவனங்களுக்கு Effective Taxஆக 20 சதவீதம் செலுத்தி வரும் நிலையில் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் மிகவும் குறைவான அளவில் மட்டும் இத்துறை நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் ஏசியன் பெயின்ட்ஸ், பெர்ஜர் பெயின்ட்ஸ், நெரோலக், BASF இந்தியா, பிடிலைட், HSIL, சீரா, கிரீன் பிலை, கிரீன்லேம், போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தை அடையும்.
லாஜிஸ்டிக்ஸ்
ஜிஎஸ்டி மசோதா அமலாக்கத்தின் மூலம் சரக்கு விநியோகத்திற்குக் குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும் சரக்கு லாரிகளின் பயன்பாட்டை அதிகரிக்கும்.
இதன் மூலம் இந்தியாவில் டன்னேஜ் டிரக் பயன்பாடுகள் அதிகரிக்கும்.
எனவே விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ், GATI, ப்ளூ டார்ட், டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா, ஸ்னோமென் லாஜிஸ்டிக்ஸ்
சிமெண்ட்
இந்தியாவில் சிமெண்ட் பொருட்கள் மீது 27-32 சதவீதம் அளவிலான வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் இத்துறை நிறுவனங்கள் மீதான வரி விதிப்பு 18-20 சதவீதம் அளவில் குறையும். இதனால் சிமெண்ட் மூட்டையின் விலை குறையும்.
இதனால் நாட்டின் கட்டுமான துறை மிகப்பெரிய வளர்ச்சியும் லாபமும் அடைய உள்ளது.
ஜிஎஸ்டி மூலம் ஏசிசி, அல்ட்ராடெக், ஜேகே சிமெண்ட், ஸ்ரீ சிமெண்ட்
பொழுதுபோக்கு
இத்துறையை மல்டிபிலெக்ஸ் மற்றும் மீடியா என இருப்பிரிவாகப் பிரிக்கப்படுகிறது.
மல்டிபிலெக்ஸ்: இத்துறையில் தற்போது 22-24 சதவீதம் அளவிலான வரி விதிக்கப்படும் நிலையில், ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் சேவை வரி, பொழுதுபோக்கு வரி மற்றும் வாட் ஆகிய மூன்றும் மாற்றப்படப் போகிறது.
இதன் மூலம் பிவிஆர், ஐநாஸ் ஆகிய நிறுவனங்கள் பாதிப்பு அடையலாம்.
மீடியா
தற்போது டிடிஎ சேவை அளிக்கும் நிறுவனங்கள் 20-21 சதவீதம் அளவிலான வரியும், பிராட்காஸ்டர்ஸ் நிறுவனங்கள் 14-15 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் டிடிஎ சேவை மற்றும் பிராட்காஸ்டர்ஸ் நிறுவனங்களுக்கு 18-20 சதவீதம் வரையிலான வரி மட்டுமே விதிக்கப்பட உள்ளது.
இதனால் ZEE, சன், ஹெச்டி மீடியா மற்றும் ஜார்கன் பிராகஷன் ஆகிய நிறுவனங்களின் லாப அளவுகளில் கணிசமான மாற்றம் ஏற்படும்.
டெக்ஸ்டைல்/கார்மென்ட்ஸ்
இத்துறை குறித்து ஜிஎஸ்டி அறிக்கையில் அதிகளவிலான குறிப்புகள் ஏதுமில்லாத காரணத்தால் டெக்ஸ்டைல்/கார்மென்ட்ஸ் குறித்த நிலைப்பாடு கணிக்கப்பட முடியவில்லை.
பார்மா
பார்மா துறை இடத்திற்குத் தகுந்தார் போலப் பல வரிச் சலுகைகள் அனுபவிக்கிறது. பல நிறுவனங்களுக்கு 6 சதவீத்திற்கும் குறைவாகவே உள்ளது.
சிறப்பம்சங்கள்
பார்மா துறைக்கான வரிச் சலுகைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய வரிச் சலுகைகள் காலாவதியாகும் வரை ஆப்படியே தொடரும். அதே சமயம் புதிய சலுகைகள் பெறுவது சிரமமாக இருக்கும்.
குறைவான லாஜிஸ்டிக் செலவுகள் மற்றும் கடமை வரி போன்றவை கீழாகப் புரட்டப்படும்.
தாக்கம்
பார்மா துறையில் எந்த மாற்றமும் இல்லை.
தகவல் தொழில்நுட்பம்
தற்போது இந்தத் துறையில் அளிக்கும் சேவைகளுக்கு 14 சதவீதம் வரியாகப் பெறப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
இந்தத் துறையில் ஜிஎஸ்டி 18 முதல் 20 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.
தகவல் தொழில்நுட்பம் துறையில் பெரும்பகுதி இந்தத் துறையின் ஏற்றுமதியின் மூலமே கிடைக்கிறது.
பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டிற்கும் எந்த வேறுபாடும் இல்லை.
தாக்கம்
நடுநிலையாக இருந்த தற்போது எதிர்மறையாக மாற வாய்ப்புள்ளது.
தொலைத்தொடர்பு
தற்போது 14 சதவீதமாக உள்ள தொலைத்தொடர்பு சேவைகள் வரி உள்ளது.
சிறப்பம்சங்கள்
தொலைத்தொடர்பு சேவைகள் மீதான வரி 18 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.
இப்படி உயர்த்தப்படும் வரியைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் மீது இந்தச் சுமையைப் போடும் என்று கூறப்படுகிறது.
உள்ளீடு வரி கடன் கிடைக்கும் துறையின் கேபக்ஸ் (Capex) செலவைக் குறைக்கும்.
தாக்கம்
இந்தத் துறையின் மீது வரியை உயர்த்துதல் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொத்தமாக எல்லா வரியையும் கடை நிலை வாடிக்கையாளர்கள் மீது போட்டுவிடும்.
உலோகம்
தற்போது உலோக பொருட்கள் மீதான வரி 19 முதல் 21 சதவீதமாக உள்ளது.
சிறப்பம்சங்கள்
வாட் வரி மாநிலங்களைப் பொருத்து 4 முதல் 50 சதவீதம் வரை இருக்கும்.
கலால் வரி 12.5%, சிஎஸ்டி 2% மற்றும் நுழைவு வரி ஆகியவை அந்தந்த மாநிலங்களைப் பொருத்துப் பெறப்படுகிறது.
தாக்கம்
ஜிஎஸ்டி கீழ், உலோகப் பொருட்கள் நிலையான ஜிஎஸ்டி விகிதத்தை விடக் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வங்கி மற்றும் நிதி சேவைகள்
இப்போது ஒரு பரிமாற்றத்திற்கு வங்கி மற்றும் நிதி சேவைகளுக்கு வட்டி இல்லாமல் 14 சதவீதம் வரியாகக் கட்டணம் செலுத்தப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
ஜிஎஸ்டி-இன் கீழ் பரிமாற்றத்திற்கான கட்டணங்கள் 18 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளது.
இது போன்ற உள்ளக சேவைகள் வரி உயர்ந்தால் வாடகை, சட்டம் மற்றும் தொழில்முறை கட்டணம், விளம்பரம், காப்பீடு, தொலைத்தொடர்பு மற்றும் பிற செலவுகளை உள்ளடக்கிய இயக்கச் செலவுகளும் சற்றே அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாக்கம்
ஜிஎஸ்டி மசோதா அமல்படுத்தப்பட்டால் நிதி சேவைகளான லோன் பிராசசிங் கட்டணம், டெபிட்/கிரெடிட் கட்டணங்கள், காப்பீடு ப்ரீமியங்கள் போன்றவை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு முதலீடு
இலவச வருமான வரி தாக்கல்
இலவசமாக வருமான வரி தாக்கல் செய்ய ஒன் ஸ்டாப் சொல்யூஷன் -தமிழ் குட்ரிட்டன்ஸ்
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications